மிளகாய் சாகுபடி
பருவம்: ஆடி, தை ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது நாற்றங்கால் : உழவு செயயும் போது நன்கு தொழுவுரம் இட்டு ( வேப்பம் புண்ணாக்கு கலந்து) மேட்டு பாத்தி முறையில் நாற்று விடுவது நன்று. ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. முதல் 30 நாளைக்கு தினமும பிறகு 3 நாளைக்கு நீர் பாய்ச்சுவது நன்று. 45 நாட்களில் நாற்று நடுவதற்கு தாயராகி விடும். மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப்பாத்திகளை ஓரளவு நிழல் படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் அகலம் ஒரு மீட்டர் வரையும், நீளம் 3 மீட்டர் வரையும், தேவைக்கேற்ப அமைக்கலாம். மண் மிருதுவாகவும் இறுக்கமாக இல்லாமலும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் அமைக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொருத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும். நல்ல வீரியமுள்ள நாற்றுகளைப் பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் சேர்க்க வேண்டும். அதோடு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டச்சத்துடன் வளர்கின்றன. மேலும், நாற்றுகளைப் பிடுங்கு...
Comments
Post a Comment