பசுமாடு சினை பிடிக்கவில்லையா ?
எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி பசு மாடுகளில் ஒரு சில மாடுகளுக்கு கர்ப்பபையில் பிரச்சினை இல்லை. சரியாக 21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வருகிறது. சரியான நேரத்தில் சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தும் பசுமாடு சினை பிடிக்கவில்லையா ? ஒரு முறைக்கு பலமுறை சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தோ சினை பிடிக்க வில்லையா? இதற்க்கான இயற்கை வழியில் எளிய தீர்வு, இந்த நான்கு பொருட்கள் மட்டும் போதும். புற்று மண் மலைவேம்பு இலை சோற்றுக் கற்றாழை கோவை இலை இந்த மருந்துகள் கொடுப்பதற்கு முன் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய நான்கு நாட்கள் கழித்து இந்த மருந்துகள் கொடுக்க வேண்டும். முதல் நாள் கொடுக்க வேண்டியவை மாலை நேரத்தில் 1கிலோ புற்று மண் 1 லி தண்ணீரில் நன்றாகக் கலந்து வைக்கவும். மறுநாள் காலை புற்று மண் தண்ணீர் கலந்த கலவையில் மேலே தெளிந்து உள்ள தண்ணீரை எடுத்து மாடிற்க்கு கொடுக்க வேண்டும். இரண்டாம் நாள் கொடுக்க வேண்...