புதியவர்களுக்கு


உயிர்நாடி விவசாயம். குழுவின் நோக்கம்:-

 1. மனித குலத்தின் உயிர்நாடியான, உலகின் பழமை வாய்ந்த விவசாயத்தைக் காப்பாற்றுவது. அதற்கு புத்துயிர் ஊட்டுவது. படிப்படியாக இரசாயன விவசாயத்தை தவிர்த்து இயற்கை வழி விவசாயத்திற்க்கு மாறுவது.
 2. நஞ்சில்லா உணவு படைத்திட இயற்கை வழி விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வது.
 3. ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள தாவரம் மற்றும் கால்நடைகளின் கழிவுப் பொருட்களைக் கொண்டு (பண்ணைக்கழிவுகள்) தரமான நஞ்சில்லாத உணவு தானியங்களை உற்பத்தி செய்வது.
 4. குறைந்த செலவில் விவசாயம் செய்யும் முறைகளை சொல்லித்தருவது.
 5. செயற்கை உரங்கள்., பூச்சிக்கொல்லிகளை படிப்படியாகக் குறைப்பது.
 6. எளிமையாக, அனைத்து இயற்கை வழி விவசாய தொழில்நுட்பங்களையும் விவசாயிகளுக்கு அறிய வைப்பது.
 7. இக்குழுவின் மூலம் 250 விவசாயிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு தெரிந்த, தொழில்நுட்பங்கள் அவர்கள் கடைபிடிக்கும் விவசாய முறைகள் மற்றும் சந்தேகங்களை கலந்துரையாடல்கள் மூலம் மற்றும் தகவல் பரிமாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
 8. எதிர்கால விவசாயிகள் இன்றைய இயற்கை வழி தொழில் நுட்பங்களை அறிந்துக் கொள்ளும் பொருட்டு, சிறந்த தொழில்நுட்பங்களை, குழுவின் இணையதளம் மற்றும் YouTube சானலில் பதிவேற்றம் செய்து பாதுகாத்தல்.
 9. மேலும், இக்குழுவின் மூலம் அரசாங்கத்தையோ அல்லது எந்த ஒரு தனி நபரையோ அல்லது வேறு குழுக்களையோ, விவசாய சங்கங்களையோ தாக்குவதோ, இழிவு படுத்துவதோ நோக்கம் இல்லை.

 

உயிர்நாடி விவசாயம் குழு உறுப்பினர்களின் கடமைகள்:-

 1. குழுவில் புத்தக பதிப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நூல்களின் மின் நூல்களை (PDF) பதிவிடுவதை தவிர்க்கவும். இது குழுவுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும். பதிப்பக சட்டப்படி பதிவு செய்யாத விவசாய நூல்களை மட்டும் பதிவிடலாம்.
 2. உறுப்பினர்கள் குழுவில் விவசாய செய்திகளை மட்டும் பதிவு செய்ய வேண்டும். விவசாயம் அல்லாத செய்திகளை முற்றிலும் தவிர்க்கவும். பல்வேறு இணைய தளங்களில் உள்ள விவசாய செய்திகளைக்கூட தேவையின்றி குழுவில் பதிவிடக் கூடாது.
 3. குழுவில் உழவர் தின வாழ்த்து மற்றும் விவசாய பயிற்சிகள் குறித்த செய்திகளைத் தவிர வேறு எந்த பண்டிகை, திருவிழா, வாழ்த்துக்களையும் அரசியல், பொதுக்கூட்டம், ரத்த தானம், உதவி செய்தல் போன்ற வேறு எந்த செய்திகளையும் கட்டாயம் பதிவிடக் கூடாது.
 4. கட்டாயம் அனைத்து உறுப்பினர்களும், குறைந்தது, வாரம் ஒரு முறையேனும் குழு நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வேண்டும்.
 5. குழுவில் புகைப்படம், வீடியோ மூலம் தங்களது கருத்துக்களை பதிவிடலாம். எழுத்துக்கள் மூலம் கருத்தை பதிவிடுபவர்கள் கட்டாயம் தமிழ் மொழியின் மூலமே பதிவிடவும். தமிழில் எழுத முடியாதவர்கள் தமிழில் குரல் பதிவு செய்யலாம்.
 6. அனைவரும் தங்களின் விவசாய சந்தேகங்களை தயங்காமல் கேட்கவும்.
 7. குழுவில் விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு கூற தனியாக யாரும் ஆலோசகர் கிடையாது.
 8. மற்ற நண்பர்களின் விவசாய சந்தேகங்களுக்கு, தெரிந்தவர்கள் அனைவரும் தயங்காமல் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை அளிக்கவும்.
 9. குழுவுக்குள் ஆரோக்கியமான தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களை நடத்துங்கள்.
 10. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, குறை சொல்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
 11. மற்ற விவசாய குழுக்களைப்பற்றியோ, அல்லது அதன் செயல்பாடுகளைப்பற்றியோ சர்ச்சைக்குரிய வகையில் விவாதிக்கவோ பேசவோ கூடாது.
 12. குழு உறுப்பினர்கள் அனைவரும், குழுவின் நோக்கம் அறிந்து, குழுவின் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 13. குழு விவாதங்களில் பங்கெடுக்கும் போதும், குழு நண்பர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை கூறும் போதும், உண்மையான கருத்துக்களை மட்டுமே பதிவிடுங்கள்.
 14. உங்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்க வேண்டும்.
 15. குழுவில் நண்பர்கள் ஆலோசனை கூறும் போது, தவறான கருத்துக்களை பதிவிட்டால், தெரிந்த நண்பர்கள் தயங்காமல் தவறை சுட்டிக் காட்ட வேண்டும்.
 16. குழுவின் பெயரைக்கூறி யாராவது ஆலோசனைக் கட்டணம் அல்லது பணம் மற்றும் பொருளுதவி கேட்டால் அதற்க்கு குழு நிர்வாகம் பொறுப்பு அல்ல. அவ்வாறு யாராவது உங்களை அணுகினால் அவர்களை நம்பாதீர்கள். அவர்களைப் பற்றி உடனடியாக குழு நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவும்.
 17. அன்றாடம் குழு நடவடிக்கைகளில் (ஆலோசனை கேட்க மட்டும் சொல்ல) பங்கு கொள்ளும் நபர்கள் மட்டும் தன்னுடைய விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய குழுவில் பதிவிட அனுமதி. குழுவை விற்பனை தளமாக மட்டும் பயன்படுத்த அனுமதியில்லை.

 

உயிர்நாடி விவசாயம் குழு நிர்வாகிகளின் நடவடிக்கைககள்:-

 1. அனைத்து நிர்வாகிகளும் ஒருமித்த கருத்தோடு, குழுவின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செயல்படுவது.
 2. குழு நடவடிக்கைகள் மற்றும் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தல்.
 3. குழுவில் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் குழுவில் புதிய உறுப்பினர்களை அவர்களின் அனுமதி மற்றும் விருப்பத்துடனே குழுவில் சேர்க்க வேண்டும்.
 4. குழுவிற்கு எதிராகவும், குழு அமைதிக்கு எதிராகவும் செயல்படுபவர்களை கண்டறிந்து அவர்களை குழுவிலிருந்து நீக்கும் அதிகாரம் குழு நிர்வாகிகளுக்கு உண்டு.
 5. குழு விவாதங்களில் பங்கு பெறாமலும், எந்தவித பதிவுகளையும் பதியாமலும் அமைதியாக இருக்கும் உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களை குழுவிலிருந்து நீக்குதல். அதற்கு பதிலாக புதிய விவசாயிகளை குழுவில் இணைத்து குழுவை மேலும் வலுவாக்குதல்.
 6. குழுவில் பதிவிடப்படும் சிறந்த கருத்துக்களை தொகுத்து குழுவின் இணையதளத்திலும், சிறந்த குரல் பதிவுகளை வீடியோக்களாக உருமாற்றி நமது YouTube சானலில் பதிவேற்றம் செய்வது.
 7. உயிர்நாடி விவசாயம் இணையதளத்தை மேம்படுத்துதல்.
 8. குழு தொடர்பான முக்கிய விவகாரங்களை முதலில் அட்மின் குழுவில் விவாதித்து இறுதி முடிவெடுத்து, பின் அதை அட்மின் வழியாக உயிர்நாடி விவசாயம் 1,2,3,4, மற்றும் உயிர்நாடி சந்தை குழுவிலும் வெளியிடுவது.

 

முக்கிய விதி.

 1. குழுவில் பதிவிடப்படும் உறுப்பினர்களின் சிறந்த குரல் பதிவுகள், நல்ல ஆரோக்கியமான விவாதங்கள், கலந்துரையாடல்கள், அனுபவ/செய்முறை வீடியோக்கள், போட்டோக்கள் ஆகியவற்றை நம் உயிர்நாடிக்குழுவின் YouTube, Facebook and Website, ஆகியவற்றில் பதிவேற்றம் செய்தல், படியெடுத்து வைக்கும் முழு உரிமம் உயிர்நாடிக்குழு நிர்வாகிகளுக்கு உண்டு.
 2. உறுப்பினர்கள் குழுவிலிருந்து வெளியேறிய பிறகு அவர்களின் வீடியோக்களை குழுவின் YouTube சானலில் இருந்து நீக்குதல் மற்றும் தொடர்தல் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே உண்டு.
 3. குழுவில் விவசாய இடுபொருட்கள் மற்றும் / உபகரணங்கள் வாங்க தொடர்பு எண்கள் உங்களுக்கு உதவும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே பகிரப்படுகிறது. இதில் குழுவிற்கு எந்த இலாபநோக்கும் கிடையாது. மேலும் அந்த பொருட்களின் தரம் மற்றும் விலையை வாங்குபவரே உறுதி செய்துகொள்ளவேண்டும். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு குழு நிர்வாகம் பொறுப்பு அல்ல.

 

இப்படிக்கு,
நிர்வாக குழு.
(உயிர்நாடி விவசாயம்)

Comments

Post a Comment

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை