எதிர் கால ஆரோக்கியமான உணவு – சிறு தானியம்
உடல் ஆரோக்கியத்திர்கு நார் சத்து இன்றியமையாதது இவை அதிகமாக உள்ள சிறு தானியங்களை உட்கொளவது சிறந்தது. மேலும் இவை மெதுவாக ஜீரணம் ஆவதால் இரத்ததில் சக்கரை கலப்பது மொதுவாகிறது. கால்சியம சத்து ஆதிகம் இருப்பதால் மூட்டு வலி, பல்வலி, வளர்ச்சி குறைபாடு நிவர்த்தி செயது உடல் சமநிலை அடைய பயன்படுகிறது. நஞசை பயிர் ( நெல், கோதுமை, கரும்பு, மக்காச்சேளம்) விட புஞ்சையில் பயிர் ( சிறு தானியம், பருப்பு, எண்ணை வித்துக்கள்) தண்ணீர் தேவை மிகவும் குறைவு, பராமரிப்பு செலவு குறைவு மேலும் விலைகளும் கனிசமான அளவு உயர்ந்து உள்ளது. கடந்த சில வருடங்களில் 20 சதவித நஞ்சை நிலம் அதிகரித்துள்ளது இதை அனைவரின் அறிந்த உண்மை. தமிழ் நாட்டின் சராசரி மழை அளவே 945 மில்லி மீட்டர் அப்படி இருக்கும் பொழுது நஞ்சை பயிர் அதிகம் செய்தால் நிலத்தடி நீர் வெகுவாக குறைய வாய்ப்பு உண்டு. அதற்கு ஏற்றார் போல் கீழ கண்ட பயிர் எவ்வளவு தண்ணீர்(மில்லி மீட்டர்) தேவைபடுகிறது என்றால் உங்களுக்கே தெரியும் நஞ்சை – நெல் (1250), வாழை(2200), கரும்பு(2200), மக்காச்சோளம்(550) புஞ்சை – மிளகாய்(600), பருத்தி(650), நிலக்கடலை(500). சோளம்(400), கம்...