எதிர் கால ஆரோக்கியமான உணவு – சிறு தானியம்


uyirnaadi-vivasayam-siruthaniyam

உடல் ஆரோக்கியத்திர்கு நார் சத்து இன்றியமையாதது இவை அதிகமாக உள்ள சிறு  தானியங்களை உட்கொளவது சிறந்தது. மேலும் இவை மெதுவாக ஜீரணம் ஆவதால் இரத்ததில் சக்கரை கலப்பது மொதுவாகிறது. கால்சியம சத்து ஆதிகம் இருப்பதால் மூட்டு வலி, பல்வலி, வளர்ச்சி குறைபாடு நிவர்த்தி செயது உடல் சமநிலை அடைய பயன்படுகிறது. நஞசை பயிர் ( நெல், கோதுமை, கரும்பு, மக்காச்சேளம்) விட புஞ்சையில் பயிர் ( சிறு தானியம், பருப்பு, எண்ணை வித்துக்கள்) தண்ணீர் தேவை மிகவும் குறைவு, பராமரிப்பு செலவு குறைவு மேலும் விலைகளும் கனிசமான அளவு உயர்ந்து உள்ளது.

கடந்த சில வருடங்களில் 20 சதவித நஞ்சை நிலம் அதிகரித்துள்ளது இதை அனைவரின் அறிந்த உண்மை. தமிழ் நாட்டின் சராசரி மழை அளவே 945 மில்லி மீட்டர் அப்படி இருக்கும் பொழுது  நஞ்சை பயிர் அதிகம் செய்தால் நிலத்தடி நீர் வெகுவாக குறைய வாய்ப்பு உண்டு. அதற்கு ஏற்றார் போல்

கீழ கண்ட பயிர் எவ்வளவு தண்ணீர்(மில்லி மீட்டர்) தேவைபடுகிறது என்றால் உங்களுக்கே தெரியும்

நஞ்சை –  நெல் (1250), வாழை(2200), கரும்பு(2200), மக்காச்சோளம்(550)

புஞ்சை – மிளகாய்(600), பருத்தி(650), நிலக்கடலை(500). சோளம்(400), கம்பு(350), கேழ்வரகு(350), பயிறு(350)

ஒரு கிலோ அரிசி விளைவிப்பதர்கு 3000 லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது மேலும் இராசயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் நிலம் சொல்லிலடங்கா மாசுபடுகிறது. சிறு தானியம் விளைவிப்பதர்கு மழை நீர் மற்றும் தொழுவுரம் போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை.

1970 களில் மைய அரசு சம விகித அளவு கடைபிடிக்கபட்டுள்து (நஞசை புஞ்சை) – நஞ்சை -10.7 கோடி டன்;;, புஞ்சை – 4.7 கோடி டன் முறையே 6:5 விகிதம்

ஆனால் 2012 இல்  அரசு சம விகித அளவு கடைபிடிக்கபடவில்லை (நஞசை புஞ்சை) – நஞ்சை -19 கோடி டன்;;, புஞ்சை – 8.2 கோடி டன் முறையே 6:2 விகிதம்

1970 களில் 1 கிலோ அரிசி- 8,கோதுமை-10. சிறு தானியங்கள்-5, பருப்பு வகைகள்-6 ருபாய் அளவு இருந்தன

இன்று 1 கிலோ அரிசி- 50,கோதுமை-40. சிறு தானியங்கள்-60, பருப்பு வகைகள்-150 ருபாய் அளவு தோராயமாக இருக்கின்றன.

நீர் செலவு அதிகமுள்ள பயிர்களை தவிரத்து செலவு குறைவான பயிர்களை செய்தால் நன்றாக இருக்கும் மண்ணும் வளப்படும்

100 கிராம் அளவில் உள்ள அரிசி, கோதுமையில் சத்துக்களின் அளவு

அரிசி – நார்சத்து:0.2 புரதம்:6.80 கால்சியம்:10.0 இரும்புசத்து:0.70

கோதுமை – நார்சத்து:1.2 புரதம்:11.8 கால்சியம்:41.0 இரும்புசத்து:5.30

மேலும் சிறு தானியத்தில உள்ள் சத்துக்கள் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவு என்பதை கீழ் வருபவைகளில் இருந்து தெரியும்

 

சிறு தானியம் பற்றிய சாகுபடீ  தொகுப்பு

 

சிறுதானியம் பெயர்: வரகு(Kodo Millet)

பருவம்: ஆடி(மானாவாரி)

விதை(ஏக்கருக்கு): 5-7 கிலோ விதை

நடவு முறை: நேரடி விதைப்பு

வயது:150 நாள்

பராமரிப்பு: தேவையில்லை

மகசூல்(கிலோ) – 1000-1200 கிலோ

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:9.0 புரதம்:8.3 கால்சியம்:27.0 இரும்புசத்து:0.50

 

சிறுதானியம் பெயர்: பனி வரகு அ காடை கண்ணி (Proso Millet)

பருவம்: புரட்டாசி(மானாவாரி), தை (பாசனம்;)

விதை(ஏக்கருக்கு): 3-4 கிலோ

நடவு முறை: நேரடி விதைப்பு

வயது: 75 நாட்கள்

பராமரிப்பு: சாதரன முறை

மகசூல்(கிலோ): 2400-3000

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:2.2 புரதம்:12.5 கால்சியம்:14.0 இரும்புசத்து:0.80

 

சிறுதானியம் பெயர்: சாமை(Little Millet)

பருவம்: ஆடி(மானாவாரி)

விதை(ஏக்கருக்கு): 3-4 கிலோ

நடவு முறை: நேரடி விதைப்பு

வயது:85-100 நாட்கள்

பராமரிப்பு: சாதரன முறை

மகசூல்(கிலோ):800 – 1000

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:7.6 புரதம்:7.7 கால்சியம்:17.0 இரும்புசத்து:9.30

 

சிறுதானியம் பெயர்: தினை(Foxtail Millet)

பருவம்: ஆடி(மானாவரி), தை(பாசனம்)

விதை(ஏக்கருக்கு): 2 கிலோ

நடவு முறை: நேரடி விதைப்பு

வயது:85 – 90 நாட்கள்

பராமரிப்பு: சாதரன முறை

மகசூல்(கிலோ): 1500-1800

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:8.0 புரதம்:12.30 கால்சியம்:31.0 இரும்புசத்து:2.80

 

சிறுதானியம் பெயர்: குதிரை வாலி(Barnyard Millet)

பருவம்: ஆடி(மானாவரி), தை(பாசனம்)

விதை(ஏக்கருக்கு): 3-4 கிலோ

நடவு முறை: நேரடி விதைப்பு

வயது:75-95 நாட்கள்

பராமரிப்பு: சாதரன முறை

மகசூல்(கிலோ):1700 – 2600

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:10.1 புரதம்:11.20 கால்சியம்:11.0 இரும்புசத்து:15.20

 

சிறுதானியம் பெயர்: சோளம்(Jowar/Sorghum)

பருவம்: ஆடி(மானாவரி), தை(பாசனம்)

விதை(ஏக்கருக்கு): 10 கிலோ

நடவு முறை: நேரடி மற்றும் நாற்று விட்டு நடுதல்(15 நாட்கள்)

வயது: 105 நாட்கள்

பராமரிப்பு: சாதரன முறை, தண்டு ஈ, அடிச்சாம்பல் நோய் நாற்று விட்டு நடும் பொழுது குறைகிறது

மகசூல்(கிலோ): 4500-6000

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:6.6 புரதம்:7.87 கால்சியம்:12.0 இரும்புசத்து:2.99

 

சிறுதானியம் பெயர்: கம்பு(Pearl Millet)

பருவம்: ஆடி(மானாவரி), தை(பாசனம்)

விதை(ஏக்கருக்கு): 3-5 கிலோ

நடவு முறை: நேரடி மற்றும் நாற்று விட்டு நடுதல்(15 நாட்கள்)

வயது: 80-100 நாள்

பராமரிப்பு: சாதரன முறை

மகசூல்(கிலோ): 2500-3500

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:1.3 புரதம்:10.60 கால்சியம்:38.0 இரும்புசத்து:16.90

 

சிறுதானியம் பெயர்: கேழ்வரகு(Finger Millet)

பருவம்: ஆடி(மானாவரி), தை(பாசனம்)

விதை(ஏக்கருக்கு):  5 கிலோ (2 கிலோ மேட்டுபாத்தி)

நடவு முறை: நேரடி மற்றும் நாற்று விட்டு நடுதல்(20 நாட்கள்), மேட்டு பாத்தி – 15 நாட்கள் நாற்று , 1 அடி பயிர் இடைவெளி, ஒரு குத்துக்கு 2 பயிர், 3 மற்றும் 6 வாரம் களை மண் கொத்தி விடுதல்

வயது: 95-110

பராமரிப்பு: கனஜீவாமிர்தம் அல்லது ஜீவாமிர்தம் 15 நாளுக்கு ஒரு முறை

மகசூல்(கிலோ): 1000-1500

சத்துக்களின் அளவு(100 கிராம்)- நார்சத்து:3.6 புரதம்:7.30 கால்சியம்:344 இரும்புசத்து:3.90

மேற்கண்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் கலந்து ஒருங்கே செயயும் பொழுது நல்ல மகசூல் குறைந்த தண்ணிரில் எடுக்கலாம் என்பது நிதர்சமான உண்மை

 

கார்த்தி, சென்னை

Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை