Posts

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

நண்பர்களுக்கு   வணக்கம் . இன்றைய தலைப்பு ஒரு நாள் காணாமல் போகும் நிலை தெரிகிறது.   விதை சேமிப்பது என்ற தலைப்பில் நாம் பாரம்பரிய விதைகள் மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளலாம். பாரம்பரிய விதைகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. கிடைக்கும் விதைகளை சரியான முறையில் பெருக்கம் செய்பவர்கள் மிக குறைவானவர்களே.   அதையும் தாண்டி விதைகள் இருப்பின் சில கூட்டம் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதாக சொல்லிக்கொண்டு விதைகள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி சென்று வெளி நாட்டிற்கு விற்கும் நிலை உருவாகி விட்டது.   உதாரணமாக மாப்பிள்ளை சம்பா மற்றும் சிவப்பு கவுனி இரண்டும் ஏறத்தாழ ஒரு நிறமாகவும் ஒரு வயதுடையதாகவும் இருந்தாலும் அதன் மறுத்துவகுணங்கள் வேறுபடும். அப்படி இருக்க இந்த இயற்கை கூட்டம் இவ்விரண்டையும் சேர்த்து ஒரு புதிய ரகத்தை விட்டு இவ்விரண்டையும் அழித்துவிட நீண்ட காலம் பிடிக்க போவதில்லை. காரணம்…… விவசாயி தமது விதையை நீண்டகாலம் சேமிக்க தேவையான வசதிகளை இல்லாததும், சோம்பேறித்தனமுமே காரணம்.   அதனால் விதைகளை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பாதுகாகிறோம், தாங்கள் தேவைப்படும் போது தங்களுக்கு விதைகள் கொடுக்கிறோம் என்று ஒரு கூ

மண் மற்றும் நீர் பரிசோதனை

மண்   மற்றும்   நீர்   பரிசோதனை நாடு முழுவதும் விவசாயம் செய்யும் மண்ணும் தண்ணீரும் ஒரே மாதிரி அமைவதில்லை. இயற்கையாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பண்புகளுடன் மண் மற்றும் தண்ணீர் அமைந்துள்ளது. இதை சரியாக அறிந்து விவசாயம் செய்தால் மட்டுமே மேலும் முன்னேற முடியும்.   விவசாயத்தில் நீர் மற்றும் மண் முக்கிய பங்கு வகிக்கின்றன ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை மண், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற தட்பவெப்பநிலைதான். இதில் நாம் மண் மற்றும் தண்ணீரின் தன்மைகளை அறிந்து கொள்ளவேண்டும்.   மண் மற்றும் தண்ணீரின் பண்புகளை தீர்மானிப்பது கார, அமில தன்மை மற்றும் பேரூட்டச்சத்துக்களும் நுண்னூட்டச் சத்துக்களுமே.   நம் வயலில் உள்ள மண், நாம் பாசனம் செய்யக்கூடிய நீரின் கார, அமில தன்மை, பேரூட்டச்சத்து மற்றும் நுண்னூட்டச் சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது நிலத்தில் அதிகமுள்ள சத்துக்கள் எவை? குறைவான சத்துக்கள் எவை? என அறிய முடிகிறது. இதன் மூலம் எளிமையாக சத்துக்களை பராமரித்து விவசாயம் செய்வதுடன், தேவையற்ற பொருளாதார மற்றும் கால விரயத்தைத் தவிர்க்கலாம்.   மண் பரிசோதனை மண் பரிசோதனை செய்ய வேண்டிய வயலில் கீழ்க்