மண் மற்றும் நீர் பரிசோதனை
மண் மற்றும் நீர் பரிசோதனை நாடு முழுவதும் விவசாயம் செய்யும் மண்ணும் தண்ணீரும் ஒரே மாதிரி அமைவதில்லை. இயற்கையாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பண்புகளுடன் மண் மற்றும் தண்ணீர் அமைந்துள்ளது. இதை சரியாக அறிந்து விவசாயம் செய்தால் மட்டுமே மேலும் முன்னேற முடியும். விவசாயத்தில் நீர் மற்றும் மண் முக்கிய பங்கு வகிக்கின்றன ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை மண், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற தட்பவெப்பநிலைதான். இதில் நாம் மண் மற்றும் தண்ணீரின் தன்மைகளை அறிந்து கொள்ளவேண்டும். மண் மற்றும் தண்ணீரின் பண்புகளை தீர்மானிப்பது கார, அமில தன்மை மற்றும் பேரூட்டச்சத்துக்களும் நுண்னூட்டச் சத்துக்களுமே. நம் வயலில் உள்ள மண், நாம் பாசனம் செய்யக்கூடிய நீரின் கார, அமில தன்மை, பேரூட்டச்சத்து மற்றும் நுண்னூட்டச் சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது நிலத்தில் அதிகமுள்ள சத்துக்கள் எவை? குறைவான சத்துக்கள் எவை? என அறிய முடிகிறது. இதன் மூலம் எளிமையாக சத்துக்களை பராமரித்து விவசாயம் செய்வதுடன், தேவையற்ற பொருளாதார மற்றும் கால விரயத்தைத் தவிர்க்கலாம். மண் பரிசோதனை மண் பர...