கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை ( தொகுப்பு இரண்டு)

கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை ( தொகுப்பு இரண்டு)

  • உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • நாடுகள் வாரியாக பால் உற்பத்தியில் 2015 படி( மில்லியன் டன்) – இந்திய( 146), அமெரிக்கா(93.5), சைனா(45), பாகிஸ்தான்(42), பிரேசில்(35.7), ஜெர்மன்(29.34), ருஷ்யா(29), பிரான்ஸ்(23.2), நியுசிலான்ட்(21.53), துருக்கி(19)
  • மாநிலம் வாரியாக பால் உற்பத்தியில் 2015 ( மில்லியன் டன்) – உபி(23.33), ரஜஸ்தான்(13.9), அந்திரம்(12.72), குஜராத்(10.315), பஞசாப்(9.714),ம.பி(8.83), மகாரஷ்டரா(8.73), ஹரியானா(7.04), தமிழ் நாடு(7), பிகார்(6.845)
  • தமிழ் நாடு பால் உற்பத்தியில் ஆவின் -20 சதவீதம், தனியார்-25 சதவீதம் மீதமுள்ள 55 சதவீதம் உற்பத்தியாகும் இடத்திலேயே விற்கப்படுகின்றன
  • இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் (2010 படி) 5.4 கோடி எருமை (யமுனை மாநிலங்களில் பொரும்பான்மை உள்ளன), பசு( 7.29 கோடி). எண்ணிக்கை அளவில் எருமை குறைவாக இருந்தாலும் பால் உற்பத்தியில் முதலிடம் (5.92 கோடி டன்), பசு (4.7 கோடி டன்) மொத்தம் 10.70 கோடி டன். உலக அளவில் பசும்பால் மற்றும் எண்ணிக்கை அதிகம்.
  • அடிப்படையில் எருமை இரண்டு வகை ஒன்று ஆப்பிரக்க இனம் மற்றொன்று இந்திய இனம். இந்திய இனம் மட்டும் தான் உலகளவில் வீட்டு உபயேகத்திற்க்கு பயன்படுத்துகிறது.
  • எருமைகளின் பங்கு மாநில அளவில் ஹரியான(80 சதம்), பஞசாப்(74 சதம்), உபி(56 சதம்), ஆந்திரம்( 54 சதம்)
  • தரமான மாடுகள் பிரேசில் போன்ற நாடுகள் நம்மலுடைய நாட்டில் இருந்து இறக்கமதி செய்து வியக்க வைத்துள்ளனார்.எ.கா கீர் பசு அவர்களிடம் 40 லட்சம் பசுக்கள் உள்ளன ஆனால் தற்பொழுது இந்தியாவில் 10-15 ஆயிரம் தரமான பசுக்களை காண்பது அரிது.
  • கலப்பின மாடுகள் வளர்ப்பதன் நன்மைகள் – அதிக பால், கன்றின் இடைவெளி(12-14 மாதம்), குறைவான பருவ காலம்(12-18 மாதம்), அமைதி மற்றும் சினைப்பருவம் கண்டுபிடிப்பது எளிமை.
  • கலப்பின மாடுகள் வளர்ப்பதன் சிரமங்கள் – பால் அடர்தி குறைவு(3-5), பால் விலை குறைவு, சீதோஷன நிலை, அதிக தீவன செலவு, நோய் எதிப்பு சக்தி குறைவு. நெய் போன்ற பொருள்கள் மதிப்பு கூட்டுவதற்கு அதிக அளவு உபயோகபடுத்த வேண்டியுள்ளது (25 -30 லிட்டர் பால் 1 கிலோ நெய் தயாரிக்க தேவைபடுகிறது). மேலும் இவை எ1 வகையான பால்.
  • எருமை மாடுகள் வளர்பதன் நன்மைகள் – இந்தியாவின் அனைத்து சீதோஷன நிலைக்கும் உகந்தது ஆக இருக்கிறது, நோய் எதிரப்பு அதிகம், பாலின் அடர்த்தி அதிகம்(6-8), பால் விலை அதிகம், மதிப்பு கூட்டடினால் நல்ல விலை கிடைக்கும், வறட்சி காலங்களில் தாக்குபிடிக்கும் தன்மை. இவற்றின் விலை கூட அதிகம். மேலும் இவை எ2 வகையான பால்
  • எருமை மாடுகள் வளர்பதன் சிரமங்கள் – அதிக காலம் பருவத்திர்கு வருவதற்கு ( 26-32 மாதம்), கன்றின் இடைவெளி(13-16 மாதம்), பருவகால அறிகுறி கண்டுபிடிப்பது சிரது சிரமம். தரமான எருமை கண்டுபிடிப்பது கடினம்.
  • வெற்றிகரமாக பால்பண்ணை நடத்த கவனிக்க வேண்டியது – வளர்ப்பது ஒரு கலையாக பார்க்க வேண்டும், தினமும் கவனிக்கபட வேண்டியது, சிறிய அளவில் தொடங்கி அதனை நன்கு அறிந்து பிறகு விரிவாக்கம் செய்வது நன்று, நல்ல பசுந்தீவனம் இருத்தல், குறைந்த விலையில் அடர்தீவனம், நோய் மேலாண்மை. மதிப்பு கூட்டுதல், இயற்கை வேளாண்மை, நேரடி விற்பனை போன்ற காரணிகள்
  • தோல்வியில் முடியும் பால்பண்னை காரணிகள் – சரியான புறிதல் இல்லாமல் பணத்திர்கு மட்டும் தொடங்குதல், தேவையில்லாமல் கால்நடை தங்குமிடத்திர்கு அதிக அளவு செலவு செய்தல், தீவன மேலாண்மையின்மை, பருவம் தவறுதல், இயந்திரமாக்கமல் அடுத்தவரை நம்பி இருத்தல்
  • அந்நிய முதலீடு கொண்ட நம்முடைய பால் நிறுவனங்கள் – நில்கிரிஸ், ஹரிட்டேஜ்,பிரிட்டானியா, திருமலா,ஹட்சன்,டோட்லா

தமிழ் நாட்டில் 35 வருடத்திற்கு முன் பால் பொருள்கள் மற்றும் கால்நடைகளின் மதிப்பீடு

  • பால் பொருட்களான – தயிர், மோர், நெய் போன்ற பொருள்கள் பொரும்பாலும் விருந்தோம்பல் மற்றும் திருவிழாக்காலங்களில் பயன்படுத்துபட்டு வந்தன.கிரமத்தின் மக்கள் தேவையின் அடிப்படையில் அவர்களாகவே அதுவும் முதியோர்கள் தயாரித்து பகிர்ந்து வந்தது அனைவருக்கும் தெரியும். காலம் செல்ல செல்ல இவை விற்பனை பொருளாக மாறிவிட்டன்
  • இதன் விளைவு பால் உற்பத்தி என்பது விவசாயிகளின் வருமானம் தரக்கூடிய ஒரு அங்கமாக மாறிவிட்டன. அதனால் அவர்கள் எருமை இனத்தினை பால் வளத்திர்காக வளர்க்க முற்பட்டனார். அதில் வெற்றியும் கண்டனார் சிலர். இன்றளவும் தேனீர் கடை மற்றும் உணவகங்களில் எருமை பால் தான் அதிக அளவு கொள்முதல் செய்வார்.
  • எருமை பால் உண்டான சந்தை வாய்ப்பு தொடர்ந்து கூட்டுறவு சங்கங்கள் சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை அதனால் அழிவின் விளிம்பில் சென்று கொண்டு இருக்கின்றன.
  • மாடுகள் உழவு வேலைக்காகவும் மற்றும் எருமை பாலுக்காக அன்று பயன்படுத்திவந்தனார்
  • பசுமை, வெண்மை, சிவப்பு புர்டசியின் விளையாட்டால் நம்மளுடைய பாதை மாறியது அதன்பின் செலவில்லாத விவசாய முறை (ஜிரோ பட்ஜெட்) ஆரோக்கியமாக உள்ளது என்ற காரண்த்தினால் நாமும் வடநாட்டு இயற்கை முறையை பின்பற்ற தெடங்கினோம். அதன் காரணத்தால் கராய்ச்சி ( பாகிஸ்தான் சிந்து மாகனம் ) மற்றும் வட மாநில மாடுகள் மேல் பால் வளத்திற்காக வளர்கப்படும் பசுக்கள் மேல் மோகம் கொள்ள ஆரம்பித்தோம்.
  • பல்வேறு வகையான பால்களிள் உள்ள சத்துக்கள் – பசு:எருமை:மனிதர்

நீர்(கிராம்) – 88.0:84.0:87.5

எனர்ஜி(கிராம்,கிலோ கலோரிஸ்) – 61.0:97.0:70.0

புரதம்(கிராம்)  – 3.2:3.7:1.0

கொழுப்பு(கிராம்)  – 3.4:6.9:4.4

லேக்டோஸ்(கிராம்)  – 4.7:5.2:6.9

மினரல்ஸ்(கிராம்)  – 0.72:0.79:0.20

  • பசுந்தீவன வகைகள்: விதையளவு(ஏக்கர், கிலோ): மகசூல்(டன்,வருடம்):புரதம்-சதவீதம்

          புல்

கோ 4, 5           : 16000 கரணை:120-150,8-9 முறை அறுவடை:9-10

கினிய       : 16000 கரணை:60-80,10 முறை அறுவடை:9-10

கேஎபஸ் 29-31 :2.5: 70-80,8 முறை அறுவடை:9-10

          பயிறு

குதிரை மசால்:6:40:20-22

வேலி மசால்: 8, 60, 18-20

காராமணி    : 10:10(60 நாளில்):12-16

சங்குபுஷ்பம்  :6:5(50 நாளில்):18

முயல் மசால்(ஸ்டைலோ):2.5:8:18-20

          சிறு தானியம்

சோளம் :10:20(60 நாட்கள்)

மக்காச்சோளம் :20:20(60-80 நாட்கள்)

கம்பு :5:10(100 நாட்கள்)

கோழ்வரகு :5:10(110 நாட்கள்)

          மரம்

அகத்தி, கிளரிசீடியா, சூபாபுல், கல்யாண முருங்கை, மல்பெரி, மரவள்ளி கிழங்கு இலை(12 மணி நேரம் கழத்து பயன்படுத்தவும்)

 

தீவன பொருட்கள் உள்ள ஊட்ட சத்துக்கள் அளவு

  • அரிசி நொய் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-30), கச்சாப்புரதம் சதவீதம்(8.7), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(2900), லைசின் சதவீதம்(0.24), மெத்தயோனின் சதவீதம்(0..15), கால்சியம் சதவீதம்(0.06), பாஸ்பரஸ் சதவீதம் (0.12)
  • அரிசி பாலிஷ் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-30), கச்சாப்புரதம் சதவீதம்(12.2), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(3000), லைசின் சதவீதம்(0.57), மெத்தயோனின் சதவீதம்(0.22), கால்சியம் சதவீதம்(0.05), பாஸ்பரஸ் சதவீதம் (0.43)
  • அரிசி தவிடு – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-20), கச்சாப்புரதம் சதவீதம்(13.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(2200), லைசின் சதவீதம்(0.59), மெத்தயோனின் சதவீதம்(0.24), கால்சியம் சதவீதம்(0.09), பாஸ்பரஸ் சதவீதம் (0.48), கச்சாப் புரதம் கிலோ(8.4), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(59.4)
  • கருக்காய் தவிடு பால் மாடுகளுக்கு (அரிசி தவிடுகளுக்கு பதிலாக) பயன்படுத்துவது நடைமுறையில் சில மாவட்டங்களில் உள்ளது.
  • மக்கச்சோளம் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-60), கச்சாப்புரதம் சதவீதம்(8.8), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(3300), லைசின் சதவீதம்(0.24), மெத்தயோனின் சதவீதம்(0.20), கால்சியம் சதவீதம்(0.02), பாஸ்பரஸ் சதவீதம் (0.10), கச்சாப் புரதம் கிலோ(7.0), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(85)
  • சோளம் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-40), கச்சாப்புரதம் சதவீதம்(9.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(3100), லைசின் சதவீதம்(0.22), மெத்தயோனின் சதவீதம்(0.18), கால்சியம் சதவீதம்(0.04), பாஸ்பரஸ் சதவீதம் (0.13), கச்சாப் புரதம் கிலோ(7.0), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(85)
  • கம்பு – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-40), கச்சாப்புரதம் சதவீதம்(12.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(2650), லைசின் சதவீதம்(0.45), மெத்தயோனின் சதவீதம்(0..25), கால்சியம் சதவீதம்(0.06), பாஸ்பரஸ் சதவீதம் (0.12), கச்சாப் புரதம் கிலோ(6.0), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(65)
  • கேழ்வரகு – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-40), கச்சாப்புரதம் சதவீதம்(9.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்( ), லைசின் சதவீதம்(0.45), மெத்தயோனின் சதவீதம்(0..25), கால்சியம் சதவீதம்(343), பாஸ்பரஸ் சதவீதம் (0.12), கச்சாப் புரதம் கிலோ(6.0), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(65)
  • கோதுமை நொய் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-25), கச்சாப்புரதம் சதவீதம்(10.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(3100), லைசின் சதவீதம்(0.34), மெத்தயோனின் சதவீதம்(0..18), கால்சியம் சதவீதம்(0.05), பாஸ்பரஸ் சதவீதம் (0.14)
  • கடலை புண்ணாக்கு – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-20-30), கச்சாப்புரதம் சதவீதம்(38-45), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(2200-2800), லைசின் சதவீதம்(1.46-79), மெத்தயோனின் சதவீதம்(0.38-45), கால்சியம் சதவீதம்(0.13-20), பாஸ்பரஸ் சதவீதம் (0.22-30), கச்சாப் புரதம் கிலோ(42), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(85)
  • புளியங் கொட்டை நொய் சில மாவட்டங்களில் புண்ணாக்குக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள். இதில் அதிக புரதம் உள்ளது மேலும் விலையும் குறைவு
  • சோளம் – சேர்க்கபடும் அளவு சதவீதம்(0-40), கச்சாப்புரதம் சதவீதம்(9.0), வளர்சிதைமாற்ற எரிசக்தி கிலோ கிராம்(3100), லைசின் சதவீதம்(0.22), மெத்தயோனின் சதவீதம்(0.18), கால்சியம் சதவீதம்(0.04), பாஸ்பரஸ் சதவீதம் (0.13), கச்சாப் புரதம் கிலோ(7.0), மொத்த செரிமானச் சத்துக்கள் கிலோ கிராம்(85)
  • கிழங்கு திப்பி மற்றும் மக்காச்சோள திப்பி கால்நடைக்கு பயனபடுத்துகிறாரகள்
  • வெளி நாடுகளில் விலங்குகள், மீன் கழிவுகள்(இரத்தம் உள்பட), மண்புழு போன்ற அடர்தீவனத்தில், யுரியா போன்றவற்றை அடர்தீவனத்தில் புரதசத்தை அதிக படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனார்.

மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் பல்வேறு முறைகள் 100 கிலோ(கிலோ)

முறை 1 – கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(25), பருப்பு நொய்(24), கோதுமை தவிடு(24), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 2 – கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(15), கேழ்வரகு(5), கொள்ளு(8), கோதுமை தவிடு(15), அரிசி தவிடு(15)தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 3 – கடலை புண்ணாக்கு ( 35), பருத்தி கொட்டை(33), கோதுமை தவிடு(30), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 4 – கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(15), மக்காச்சோளம்(18), கொள்ளு(5), கோதுமை தவிடு(30), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 5 – கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(10),மரவள்ளி மாவு (18), கோதுமை தவிடு(35), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 6 – கடலை புண்ணாக்கு (30), பருப்பு நொய்(15), கோதுமை தவிடு(43), வெல்லப்பாகு(10), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

முறை 7 – கடலை புண்ணாக்கு (15), கருக்காய் தவிடு(30), கோதுமை தவிடு(30), புளியங்கொட்டை நொய்(10), கேழவரகு அல்லது கம்பு அல்லது மக்காச்சோளம் (15), வெல்லப்பாகு(8),தாதுஉப்பு கலவை(1), உப்பு(1)

உலர் தீவனம்

உலர்ந்த நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, வேரகடலை கொடி, உலுந்து செடி போன்றவைகள் உலர் தீவனம் என்று சொல்வோம

அன்றாட தீவன அளவீடு( தேரயமாக)

பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் பதது சதம்( 7:பசுந்தீவனம்,2 உலர் தீவனம், 1:அடர் தீவனம் தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்) எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம். ஒரு சில கலப்பின மாடுகளுக்கு ஒவ்வொரு 1.500 லிட்டர் பாலுக்கும் 1கிலோ அடர்தீவனம் கொடுக்க சொல்கறர்கள்;. அவை நடைமுறை சிக்கல் இருப்பதால் வேறு வழிகளில் யோசித்து வருகிறார்கள்.

பால் வற்றிய மாடுகளுக்கு அதன் உடல் எடையில் பதது சதம்( 8:பசுந்தீவனம்,1 உலர் தீவனம், .5:அடர் தீவனம் தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்).எ.கா தோரயமாக 22 கிலோ பசுந்தீவனம், 2-4 கிலோ உலர் தீவனம், 1.5 கிலோ அடர் தீவனம்

தீவன ஊறுகாய் தயரித்தல்(1000 கிலோ)

தேவைபடும் போருள் :  தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், கோஎப்ஸ் 29-31, வெலலப்பாகு அல்லது மேலாசஸ் 20 கிலோ, சாதரண உப்பு -8 கிலோ – பாலிதின பை அல்லது தொட்டி அல்லது டிரம்

தயரிக்கும் முறை

  • பயிர்களை பால் பருவத்தில் அறுவடை செய்து 1-2 மணி நேரம் உளர விட வேண்டும்
  • பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும் (தீவனம் வெட்டும் இயந்திரம் இருந்தால் நன்று)
  • நறுக்கியவற்றை குழிகளில் அல்லது டிரம்மில் அடுக்காக கொட்டவும். ஒவ்வொரு முறையும் நன்கு அழுத்தி விடவும் ( காற்று வெளியேற்றுவதர்காக)
  • ஒவ்வொறு அடுக்குக்கும் வெள்ளம் மற்றும் உப்பு தெளித்து நிரப்பவும்.
  • பிறகு காற்று மற்றும் நீர் புகாமல் பாலிதின் கொண்டு மூடவும்
  • மூன்று மாதம் கழித்து இவற்றை 9-12 மாதம் வரை பயன்படுத்தலாம். பசுந்தீவனம் இல்லாத காலங்களில் இவற்றை பயன்படுத்தலாம். பசுமை மாறமல் இருப்பதால் கால்நடை விரும்பி உண்ணும்.

Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை