நம் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள்

நம் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள் பற்றி  சிறிய தொகுப்பு

நம் நாட்டு மாடுகள் பல்வேறு வகைகளில் கீழ் கண்டவாறு உழவர்களுக்கு மற்றும் நுகர்வோர்களுக்கு உதவிசெய்கிறது

  • இயற்கை விவசாயம் செய்ய இடுபொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
  • உழுவு வேலை செய்வதற்கு பயன் படுகிறது.
  • கால் நடைகளை கொண்டு டிரக்டரக்கு சமமாக உழவு மற்றும் விதை விதைப்பதர்கு உண்டான சாதனம் தற்பொழுது வட மாநிலத்தில் வந்து விட்டது.
  • நிறைய மூலதன செலவு செய்யாமல் உழவர்களுக்கு எளிய முறையில் உதவி செய்கிறது.
  • நாட்டுரக மாடுகள் அதனுடைய இயல்பான தன்மைகேற்ப மூன்று வகையாக பிரிக்கலாம் அவைகளில் சில பாலுக்கான, வேலைக்கான மற்றும் பொதுவான ரகங்கள்
  • பாலுக்கான ரகங்கள் – கறவை அளவு (அதிகம் காணப்படும் மாநிலங்கள்)- கீர்- 2000:6000 கிலோ( குஜராத், ராஜஸ்தான்), சாஹிவால் -2000:4000 கிலோ ( பஞ்சாப், ஹறியானா, உத்திர பிரதேசம்), ரெட் சிந்தி – 2000:6000 கிலோ ( ஆந்திரா), ராதி – 1800:3500 கிலோ(ராஜஸ்தான, ஹரியானா, பஞ்சாப்)
  • வேலைக்கான மற்றும் வறட்சியை தாங்கும் ரகங்கள (அதிகம் காணப்படும் மாநிலங்கள்) – காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர் ( தமிழ் நாடு), ஹாலிக்கார் ( கர்நாடகா), நாகேரி( டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம), மால்வி( ராஜஸ்தான், மத்திய பிரதேசம்)
  • பொதுவான ரகங்கள் மிதமான பால் மற்றும் வேலை செய்யக்கூடிய ரகங்கள் (அதிகம் காணப்படும் மாநிலங்கள்) – ஓங்கோல் ( ஆந்திரா), காங்கிரேஜ் ( குஜராத்), தார்பார்க்கார் – 1800:3500 கிலோ (ராஜஸ்தான்), வாச்சுர் ( கேரளா), ஹரியானா ( ஹரியானா, பிகார், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம்)
  • தற்பொழுது மேற்கண்ட ரகங்களை ஒரு சிலர் தேவைகேற்ப எடுத்து வருகின்றனார் ஆனால் போக்குவரத்து செலவு அகிகம் தேரயமாக சென்னையில் இருந்து ராஜஸ்தான் – 2200 கிலோ மீட்டர், பஞ்சாப் – 2500 கிலோ மீட்டர், குஜராத் -1371 கிலோ மீட்டர்.
  • தற்பொழுது நாட்டு மாட்டு பால் ஆரோக்கியமானது என்ற காரணத்தால் கொஞசம் கோஞமாக நம்மலுடைய கால்நடைகளை மாற்றி கொள்வது நன்று ஏற்கனவே உழவர்கள் பெரும் பொருளாதார நஷ்டத்தில் இருப்பதால் ஓரே சமயத்தில் அதிக முதலிடு செய்து நன்கு பால் தருவிக்கும் நாட்டு மாடுகளை வாங்கும் நிலையில் மக்கள் இல்லை ஆகையால் அயல் நாட்டு சினை ஊசிகளை தவிர்த்து நம் நாட்டு காளை சினை ஊசிகளை தேவைகேற்ப (பால் அல்லது வேலை செய்யும் இனங்களை )பயன்படுத்தி குறுகிய காலத்தில் நம்மலுடைய நோக்கம் வெற்றி பெற செய்யலாம்.

 

நம் நாட்டு எருமைகள் பல்வேறு வகைகளில் கீழ் கண்டவாறு உழவர்களுக்கு மற்றும் நுகர்வோர்களுக்கு உதவிசெய்கிறது

  • இயற்கை விவசாயம் செய்ய இடுபொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
  • உழுவு வேலை செய்வதற்கு பயன் படுகிறது ( வட கிழக்கு மாநிலங்களில்).
  • மாடுகளைபோல் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் இருப்பதால் அவற்றின் வெப்பத்தை தனிக்க தண்ணீர் தினமும் தேவைபடுகிறது ஆகையால் ஓரளவு மழை பிரதேச மற்றும் ஆற்று படுகை உள்ள மாநிலங்களில் அதிக அளவு வளர்க்கபடுகிறது.
  • எருமைகள் பருவ வயது – 4 வருடம் அல்லது 50 மாதம், கன்றின் இடைவெளி – 450 நாட்கள், கரு முதிர்ச்சி அடையும் நாட்கள் – 400, பால் கொடுக்கும் நாட்கள் – 300, பால் கொடுக்கும் அளவு – 2500 கிலோ, பாலின் அடர்த்தி(FAT) – 7.2
  • இவற்றின் பால் அடர்த்தி அதிகம் அகையால் வெண்ணெய் அதிக அளவு கிடைக்கும்.
  • எருமைகளின் ரகங்கள் (அதிகம் உள்ள மாநிலங்கள்) – மூரா ( ஹரியானா), பாஹடவாரி ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்), ஜாவ்ராபாடி ( குஜராத்), சுருதி( குஜராத்), மிஹேஸ்னா( குஜராத்), நாக்பூரி( மஹாராஸ்டிரா), நீலி ராவி ( பாஞ்சாப்)

காரத்தி , சென்னை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை