எளிய மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை

தண்ணீர் வசதி குறைவான மற்றும் பசுந்தீவனம் வளர்க்க சுழல் இல்லாத சமயத்தில் ஹைட்ரோபோனிக் முறை கொண்டு சமாளிக்கலாம்

  • உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒரு நிழல் குடில் அமைத்து கொள்ளவும்(50 சதம் சில இடங்களில் 90 சதம் வெப்ப நிலை பொறுத்து) தரைதளம் நீர் தேங்காமல் பாரத்து கொள்ளவும் அல்லது மண்ல் பரப்பி வைக்கவும். ஒரு சில இடங்களில் கட்டிடத்தில் பயன்படுத்தும் பொழுது விளக்கு ஒளியை பயன்படுத்து கின்றனார் வெளிச்சத்திற்காக
  • உங்களுடைய தீவன தட்டு அளவிற்கு அடுக்கு அமைத்து கொள்ளவும் முடிந்த வரை 7-8 அடுக்குகள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். தண்ணீரால் பாதிப்பு இல்லாமல் இருக்கும் உபகரண்த்தை பயன்படுத்தவும்
  • தீவன தட்டின் அடிப்பகுதியில் சிரிய கம்பி அல்லது கோனுசி கொண்டு தட்டின் அடிப்பாகத்தில் 6-7 ஓட்டை 2 குண்டுசி தடிமனத்திர்கு வெப்ப படுத்தி ஓட்டை போட வேண்டும். நீர் சிறிது சிரிதாக வெளியேறுவதர்கு மேலும் அடை படாமல் பார்த்து கொள்ள வேண்டும்( தட்டு 1 -1.5 அடி நீளம் அகலம் இருந்தால் நன்றாக இருக்கும்)
  • பார்லி, கோதுமை, மக்காச் சோளம், கொள்ளு போன்றவை தீவன வளர்ப்பிற்கு பயனபடுத்தி கொள்ளலாம். இவைகளில் மக்காச் சோளம் விலை குறைவு ஆகையால் இதை பயன்படுத்துவது எளிது.
  • தரமான விதை தேர்வு மிகவும் அவசியம் ( விதை அடிபடாமல், உடைந்து மற்று சொத்தை இல்லாமல் இருத்தல் நன்று)
  • விதையை ஒரு சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரம் நீரில் மூழகும் படி செய்யவும் (முடிந்தால் கடைசி 2 மணி நேரம் பீஜாமிர்தம் விதை நேர்த்தி செய்யவும்) அவ்வாறு இயலவில்லை என்றால் சிறிது கோமியம் சேரத்துக்கொள்ளவும். பிறகு அடுத்த 24 மணி நேரம்(மறுநாள்) நீரில் இருந்து எடுத்து இருட்டில் வைக்கவும்
  • மூன்றாம் நாள் சணல் சாக்கில் இருந்து ஒரு தட்டிர்கு 400 கிராம் விதம் ஒன்றின் மேல் ஒன்று படாமல் பரப்பி வைக்கவும்
  • இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பகலில் மட்டும் தண்ணீர் தெளித்துவரவும் ( 5-10 நிமிடத்திற்கு ). எ.கா – காலை 8,10,12 மதியம் 2,4,6 மணி அளவில் தெளிப்பு செய்யவும்.
  • பயிர் பெரிது ஆக ஆக தட்டுக்களை நன்கு வெளிச்சம் உள்ளவாறு மேல் வரிசைகளில் வைக்கவும்
  • 8-10 வது நாளில் நன்கு வளற்ச்சி அடைந்து இருக்கும் அந்த சமயத்தில் எடுத்து கால்நடைக்கு கொடுக்கவும். அதற்குமேல் சென்றால் பயிர் அரோக்கியமான முறையில் வளர்ச்சி சரியாக இருக்காது.
  • நீரை தெளிப்பதற்கு உங்களுடைய வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளவும் உதரணமாக தானாக இயங்கும் தெளிப்பு முறை, எலக்ட்ரிக் ஸ்பிரேயர் அல்லது சாதாரண தெளிப்பான். முடிந்தவரை தெளிக்கும் பொழுது விதை பிரளாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • ஒவ்வொறு நாளும் கடைசி தெளிப்பு செய்யும் பொழுது எதாவது ஒரு வளர்ச்சி ஊக்கி சேர்த்து தெளித்தல் நன்று உதரணமாக 4-5 சதம் இளநீர் அல்லது ஜீவாமிர்தம் அல்லது அமுதக் கரைசல் அல்லது மீன் அமிலம் அல்லது இ.ம் அல்லது வேப்பிலை அல்லது கற்றாலை அல்லது புங்கன் இலை கரைசல் பயன்படுத்தவும்.
  • கால்நடைக்கு கொடுக்கும் பொழுது ஒரு முறை சுத்தமான தண்ணீரில் தெளித்து சிறிது நேரம் கழித்து கொடுக்கவும். இதில் மண் இல்லததால் நேரடியாக கால்நடைக்கு கொடுக்கலாம்
  • உங்களுடைய வசதிக்கு ஏற்ப திவனவிதை பயன்படுத்தவும் ஒரு வாரத்தில் தோரயமாக 1 கிலோ தீவனம் 8 நாட்களில் 8 கிலோ கிராம் பசுந்தீவனம் எடுக்கலாம். தரமான விதை மற்றும் வளற்ச்சி ஊக்கியை பொறுத்து சற்று கூட குறைய இருக்கும்.
  • இதன் மூலம் 1 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ அளவுள்ள தீவனம் வளர்க்கலாம் அதுவும் ஒரு வாரத்தில்
  • 10-15 சதம் பாலின் அளவு மற்றும் அடர்த்தி அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது
  • 10-15 சதம் அடர்தீவனம் குறைவாக கொடுக்கலாம்.
  • மண்ணில்லா தீவனத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன உதரணத்திர்கு மக்காச்சோளத்தில் கீழ்கண்ட சத்துக்கள் தோரயமாக அடங்கியுள்ளன. ஈரப்பதம் 80 சதம், புரதம் 14 சதம், நார்ச்சத்து 13.54 சதம், நைட்ரஜன் அல்லாத சத்துக்கள் 65 சதவீதம், வைட்டமின்ஸ், காப்பர், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னிசியம், ஜிங்க் போன்ற பல சத்துக்கள் உள்ளன. மேலும் ஒரு டெஸ்ட் முடிவு இனைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு

 

கார்த்தி, சென்னை

 


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை