லாபகரமான சிறு பண்ணை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய 7 வழிமுறைகள்
- எனது பெயர் மொரினோ. நானும் எனது மனனவியும் நெதர்லொந்து நாட்டில் 1/2 ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து சந்தையில் நேரடி விற்பனைசெய்கின்றோம்.
- 10 க்கு மேற்பட்ட பண்ணையில் வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் பின்வரும் 7 வழிமுறைகள் பயன்படுத்தி இந்த பண்ணையை வடிவமைத்து உள்ளோம்.
- முதல்வருடம்சிறியதாகஆரம்பிக்கவும். பின்னர்நீங்கள்திட்டமிட்டதலில்எந்த அளவிற்கு சரியாக அமைந்தது என்று கண்டறிந்து அதன் பின்னர் பண்னைனய விரிவுபடுத்தவும்… பண்னை ஆரம்பிக்கும் போது அதிக முதலீடு ஆவதால் சிறிது சிறிதொகசெய்யும் பொழுது தவறுகளை கண்டறிவது எளிது.
- பொரும்பாலான பண்ணைகள் நஷ்டத்தில் முடிவதற்கு காரணம் எடுத்த வுடன் பெரிதாக செய்வதால் இழப்பு அதிகமாக உள்ளது.நான் செய்த மிகப்பெரிய தவறு நான் செய்யும் பயிர் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்காமல் இருந்தது. தகவல் இருந்தால் பின்னாளில் தவறு எங்கு நடந்தது என கண்டறிய இயலும்.
சரி நான் பயன்படுத்திய வழிமுறைக்கு செல்வோம்.
1. சந்தையை கண்டறிதல்:
- பயிர் செய்வதற்கு முன்பு நமக்கான சந்தை வாய்ப்பு கண்டறிய வேண்டும்…நமது பொருளுக்கான வாடிக்கையாளர் யார்? அந்த பொருள் எவ்வளவு விற்பனை ஆகிறது என தெரிந்து கொள்ள வேண்டும்.
- சிறுபண்ணையில் லாபம் என்பது நேரடி விற்பனை செய்தால் மட்டுமே கிடைக்கும்.ஆகவே நமது பொருளை சந்தையில் விற்பனை செய்வதா, கடையில் விற்பனை செய்வதா, வியாபாரி க்கு விற்பனை செய்தவதா என முடிவு செய்ய வேண்டும்.
- சந்தைக்கு சென்று காய்கறி எப்படி விற்பனை ஆகிறது என பார்க்க வேண்டும்… எவ்வளவு விற்பனை ஆகிறது, வாடிக்கையாளர் வாங்கும் திறன் என்ன? , ஆகியவற்றை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.அதிகபட்சம் 5 லிருந்து 10 காய்கறிகளை முதல் வருடம் முயற்சி செய்யலாம்.
- முதல் வருடம் முழுவதும் கற்றுக்கொள்ளவே நாட்கள் ஆகும் ஆதலால் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
- ஆரம்பத்திலேயே சந்தை வாய்ப்பு தெரிந்து கொண்டால் முதல் வருடத்தில் செய்த தவறுகளை எளிதாக இரண்டாவது வருடத்தில் சரி செய்யலாம்.
2. பண்ணை வடிவமைப்பு:
- உற்பத்தி செலவு குறைத்து லாபகரமாக விவசாயம் செய்ய பண்ணை வடிவமைப்பு முக்கியம்.
- முதலில் பண்ணையின் வரைபடம் உருவாக்க வேண்டும். பின் அதைசிறு பகுதிகளாக பிரிக்க வேண்டும்.
- பயிர் செய்யும் இடம், காய்கறி சுத்தம் செய்யும் இடம், நாற்று வளர்க்கும் இடம், சாலை வசதி, சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றின் இடங்கள் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதன் முக்கிய நோக்கம் தேவை இல்லாமல் பண்ணையில் அதிக தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.
3. பயிர் உற்பத்தியை திட்டமிடல்
- சந்தை வாய்ப்பு பற்றி நாம் வழிமுறை 1 கணித்தது போல நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.ஒவ்வொரு வாரமும் தேவை எவ்வளவு என்பதற்கு ஏற்ப நாம்உற்பத்தி செய்வது சவாலான காரியம் தான்.
- சந்தையின்விற்பனை வாய்ப்பு மற்றும் நாம் திட்டமிட்ட வருமானம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு உற்பத்தி திட்டமிட வேண்டும்.
- பயிர் அறுவடைக்கு தயாராக ஆகும் நாட்கள், எவ்வளவு அறுவடை எவ்வளவு நிலத்தில் கிடைக்கும் என்ற தகவல்களை ஒரு மேட்டு பாத்திக்கு கீழே இணைத்துள்ளேன்.
- உதாரணமாக எனக்கு வாரத்திற்கு 90 கட்டு முள்ளங்கி கீரை வேண்டும் என்றால் படத்தில் உள்ள கணக்குபடிகுறைந்த பட்சம் 2 பாத்தி போட வேண்டும்.
4. நிலம் தயாரிப்பு:
- குத்தகை நிலத்தில் முதன்முறையாக நிலம் தயாரிப்பு செய்யும் போது உள்ள மிக முக்கியமான பிரச்சினை களை. களையை கட்டுபடுத்த அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதற்கு முன்று வழிமுறைகள் உள்ளன.
1.உழவு
இந்த முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறதது. இதில் மண்ணில் உள்ள களை மேல வந்து மீண்டும் முளைக்க வாய்ப்பு உள்ளது.
2. பிளாஸ்டிக் முடாக்கு
இந்த முறையில் களை நீக்க 6 முதல் 12 மாதம் ஆகும்.
3. உழவில்லா முறை:
மக்கிய தொழு உரம் 6 inch உயரத்திற்கு போட்டு களையை கட்டுபடுத்தி மேட்டு பாத்தியாக பயிர் செய்யும் முறை. இதில் களை மிக குறைவு .
- நான் நிலத்தை குத்தகைக்கு எடுத்த சமயம் உடனடியாக பயிர் செய்ய வேண்டும் என்ற நிலை. அதே சமயம் அதிகமான தொழுஉரம் வாங்க முடியாத நிலை.ஏனவே ஒரே ஒரு முறை மட்டும் உழவு செய்து 6 inch பதிலாக 3 inch தொழு உரம் போட்டு ஆரம்பிதேன்..
- மேட்டு பாத்தி க்கு இடையே உள்ள நடைபாதை முழுவதும் மூடாக்குபோட்டேன். இதனால்களைக்கு ஆகும் செலவு மிக குறைவு.
5. பயிர் வளர்ப்பு:
- பயிரானது நேரடி விதைப்பு மற்றும் நாற்று விட்டு வளர்த்தல் என்ற இரண்டு முறையில் இங்கு வளர்க்கப்படுகிறது.
- விதையை நேரடியாக விதைக்க jang seeder , six row seeder என்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறேன். காய்கறியை பொருத்து அவற்றிக்கான இடைவெளி கீழ்க்கண்ட படத்தின்முலம் தேர்தெடுக்கபடும்.
- ஒவ்வொரு மேட்டு பாத்தி யும் 2.5 or 3 அடி அகலம் 100 அடி நீளம். இரண்டு மேடு பாதிக்கு உள்ள இடைவெளி1.5 or 2 அடி அகலம்.
6. விற்பனை செய்தல்:
- ஒரு காய்கறியை விற்பனை செய்யும்போது உங்கள் பண்ணையின் பெயர், நீங்கள் பயிர் செய்யும் முறை, நீங்கள் விவசாயத்திற்கு வந்ததன் நோக்கம், ஆர்கானிக் விவசாயம் ஆகிய அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.இவை அனைத்தும் சேர்ந்ததுதான் உங்கள் பண்ணையின் தரம்.
- நாம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதுகாய்கறியுடன் நமது பண்ணையின் தரத்தையும் சேர்த்தே தருகிறோம்…
- நுகர்வோர் என்ற முறையில் நமது பண்ணையின் தரத்தை பற்றி நாம் அவர்களுக்கு கூற வேண்டும் அல்லது அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
7. தகவல் சேகரிப்பு மற்றும் மேம்படுத்தல்:
- ஒரு பண்ணையின் வெற்றிக்கு இது மிக முக்கியம். ஒரு spreadsheet ல் உற்பத்தி மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும்.
- அறுவடை அளவு, தொழு உரம் அளவு, மேட்டு பாத்தி எண்ணிக்கை, ஆட்கள் எண்ணிக்கை, வேலை நேரம் ஆகிய தகவல்களை சேகரித்து வைத்தால் பின்னாலில் இதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்தல் எளிது.
- ஒரு சில இடங்களில் முடிவு எடுக்க இந்த தகவல் மிக உதவியாக இருக்கும்.ஒரு மாதத்தில் எவ்வளவு விற்பனை ஆகிறது, ஒரு வருடத்தில் எவ்வளவு விற்பனை ஆகிறது, எந்த பயிர் லாபகரமானது எந்த பயிருக்கு அதிக வேலை செய்ய வேண்டும் போன்ற தகவல்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
- வாரத்திற்கு ஒரு மணி நேரம் அந்த வாரத்தில் நடந்த தகவல்களைசேகரித்து வைத்தால் போதுமானது ஆகும்.
- விவசாய வேலையில் குறிப்பிட்ட வேலையை உதாரணமாக களை , அறுவடை ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்ய வேண்டும்….ஆகவே நேரம் மிக முக்கியமானது…அதை சரியாக பயன்படுத்த இந்த வழிமுறை 7 மிக மிக முக்கியம்.
தகவல் சேகரிப்பு மற்றும் மொழி பெயர்ப்பு – செந்தில் , சத்தியமங்கலம்
Note that buying a gaming license from a certain nation doesn’t mean that only individuals in that nation can access your 카지노사이트 online on line casino. People from wherever in the world can still play video games in your site. Yes, you canabsolutely win real cash should you place precise money bets at Betiton™ UK. That method you'll be able to|you probably can} receive real money should you win.
ReplyDelete