விவசாயத்தில் பல்வேறு வகையான உழவு முறைகளும், அதனால் ஏற்படும் நன்மைகளும்

19-02-2017 அன்று பதிமூன்றாவது வாரமாக விவாத தலைப்புகளில் ஒன்று பல்வேறு வகையான உழவு முறைகளும் அதன் நன்மைகளும் . வழக்கம் போல் அருமையாக காட்டக்கூடல்பட்டி அசோக்குமார் அவர்கள் கூறும் கருத்துக்கள்

உழவு முறைகளில் மிகவும் பழமை வாய்ந்ததும் சிறந்தது என்று கருதப்படுவது மண்புழு உழவு மட்டுமே. மண்புழுக்கள் மண்ணில் உள்ள மக்குகளை அவ்வப்போது உண்டுவிட்டு மேலே சீதோஷன நிலை சரி இல்லாத போது மண்ணுள் தனக்கு ஏற்ற சூழ்நிலை உள்ள இடம் சென்று விடும் அப்படி போகும் பட்சத்தில் மண்ணை உழவு செய்து கொண்டே செல்லும் விளைவு மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் அதனால் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு மீண்டும் தனக்கு உணவு தேவை படும்போதும் நல்ல ஈர பதம் மண்ணில் இருக்கும் பொதும் மேலே வந்து மக்குகளை மண்ணுடன் கலந்து உண்டு அதன் எச்சங்களை வெளியிடும்போது மக்குகள் மண்ணுடன் கலந்து, புழுக்களின் ஜீரண மண்டலத்தில் சுரக்கும் ஒரு வித திரவத்துடன் கலப்பதனால் அதன் எச்சம் இந்த மண்ணுலகில் இன்று வரை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு சிறந்த பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய ஒன்றாக கருத படுகிறது. அதனால் விவசாயி பயிர் செய்வதில் வெற்றி கண்டான்.

உழவு செய்யும் செலவுகள் என்பதே இல்லை. பயிரில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அப்படியே விட்டு அடுத்த பயிரினை சுழற்சி முறையில் செய்த காரணத்தால் மண்ணில் மக்குகள் அதிகமாக இருந்து மண்புழுக்களுக்கு உணவாக விளங்கியதாக மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகி மண்ணில் மேலும் கீழும் சென்று வர நல்ல உழவு செய்யப்பட்டு பயிர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் கிடைக்க பெற்று நல்ல விளைச்சல் இருந்தது. இதுவே உலகில் முதன் முறையாக தோன்றிய உழவு முறை. இதற்க்கு அடக்கமே மற்ற உழவு முறைகள்.

இது வரை நாம்  உழவு முறை பற்றி கண்டோம். அதற்கு அடுத்த நிலையாக மனிதனின் சோம்பல் மற்றும் சோம்பேறி குணங்கள் தொடங்கின. அங்கே தோன்றியது அழிவின் பாதை. மாடுகள் மலைகள் மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் புற்களை உண்டு வருவதை கண்ட மனிதன் இவற்றின் சாது தன்மைகளை உணர்ந்து அவற்றை சுமை தூக்க பயன்படுத்த எண்ணினான்.

அவற்றை பிடித்து அடக்கி தமது கட்டுதரைகளில் கட்டி வைத்து அதற்கு தீவணமிட தன் நிலத்தில் மக்குகளாக இருந்து வந்த விவசாய கழிவுகளை உணவாக கொடுக்க ஆரம்பித்தான். அதனால் மக்குகள் குறைந்து மண்ணில் புழுக்களின் எண்ணிக்கை குறைந்து பயிர் விளைச்சல் குறைவதை கண்டு, தமது கால்நடைகளின் கழிவுகளை பயன்படுத்தினான். அதனால் கால்நடை கழிவுகள் இட்ட சமயத்தில் மண் உழவு செய்யப்பட்டும் மற்ற நேரங்களில் இறுகிய நிலையிலும் காணப்பட்டதால் தம்மிடம் உள்ள கால்நடைகளை பயன்படுத்தி மண்ணை புரட்டி போட எண்ணியதன் விளைவு நல்ல விளைச்சல் கிடைத்தது.

இதற்க்கிடையில் கால்நடைகள் மூலம் பால் கறந்து அவற்றை ருசி கண்ட மனிதன் கால்நடைகளை பெருக்கி கொண்டான். அவை உயிர் இழந்ததால் அதன் தோலை பயன்படுத்தி பறி மற்றும் காலணிகள் செய்து சுகம் கண்டான் அதனால் எண்ணிக்கையில் கால்நடைகள் அதிகமாகி விவசாயத்தில் ஒரு அங்கமாக விளங்கியது. மரங்களை வெட்டி அதில் கலப்பைகள் செய்து உழுது பயிர் செய்து பழைய முறைகளை மறந்து இந்த முறையே சரி என்ற என்னோடம் தோன்ற ஆரம்பித்து அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்து எதிர்கால சந்ததிகளை அழிவு பாதைக்கு எடுத்து செல்கிறோம் என்று தெரியாமலே தமது கண்டுபிடிப்புகளை கண்டு பெருமிதம் கண்டான். இப்படியாக சில காலங்கள் ஓடின. அடுத்த சில நூற்றாண்டுகள் மாடுகள் வைத்து உழுத மனிதன் விஞ்ஞானத்தை விவசாயத்தில் திணித்து அடுத்த கட்ட அழிவு பாதைக்கு தள்ள பட்டான்.

   

காடுகள் அழிக்க பட்டு மண்ணில் வெய்யில் நேரடியாக பட்டதன் விளைவு மண்ணில் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விளைச்சல் பாதிக்க பட்டது. பிறகு இயந்திரம் கொண்டு ஆழமாக உழுதால் விளைச்சல் கிடைக்கும் என்று எண்ணி தமது கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாரம்பரியத்தை மறந்து போனான்.

மேலே பதிவு செய்யப்பட்ட அணைத்து உப கரணங்களும் நாம் கடந்த 20 வருடங்களாக உபயோகித்து வந்த விவசாய கருவிகள். இவை மண்ணை 3அடி ஆழம் வரை உழுது விடும் திறமை கொண்டது.

இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் சிறிதும் இல்லாமல் வறண்டு மலடானது. தேவைகளை பூர்த்திசெய்ய ரசாயன உரங்களை பயன்படுத்தியும் கருவிகள் செய்ய கடன் பெற்றும் தமது வாழ்வாதாரத்தை இழக்க ஆரம்பித்தது. இன்றைய தலைமுறை கண்டிததன் விளைவாக இது போன்ற கருவிகள் இப்போது உபயோக படுத்தப்படாமல் கிடப்பில் இருப்பதை நீங்கள் பார்க்க முடிகிறது.

  

அடுத்த தலைப்பாக சத்து குறைபாடுகளும் அதன் நிவர்த்திகளும்

முதலாவதாக மண் வளம்.

மண்ணை வளப்படுத நாம் பல தானியங்கள் விதைத்து அவை மண்ணில் மக்கும் வரை ஈர பதத்துடன் வைத்து இருக்க வேண்டும். அப்போது தான் அவை நன்கு மக்கி அணைத்து நுண்ணுயிரிகளும் பெருக்கமடையும்.

அதனால் மடக்கி உழுவதற்கு நாம் மழை காலங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி உயிர் உரங்கள் கொடுத்தும் பசுந்தாள் உரம் இட்டும் மண்ணை வளப்படுத்தினாலும் நீர் மாசு பட்டு இருப்பதால் மண்ணில் உள்ள நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்களை சீராக பயிர்களுக்கு எடுத்து செல்ல நுண்ணுரிகளால் சீராக இயங்க முடியாத நிலை.

அதனால்தான் எவ்வளவு பாடுபட்டு மண்ணை வளப்படுத்தினாலும் பயிர்களுக்கு சில பற்றாகுறைகள் வந்த வண்ணம் உள்ளன.

மண்ணை நன்கு வளப்படுத்திக்கொண்டு

நாம் பாசன நீரையும் அதே சமயத்தில் சமன் செய்து கொடுத்தால் மட்டுமே சத்து பற்றா குறைகள் வராமல் தடுக்கலாம்.

இதற்காக நாம் பாசனம் செய்யும் ஒவ்வொரு முறையும் அந்த நீரில் அமிர்தகரைசல், இ. எம் கரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றி கரைத்து பாசனம் செய்து வர நாம் மேற்கண்ட சத்து பற்றாகுறைகள் இருந்து விடுபடலாம்.


Comments

Popular posts from this blog

மிளகாய் சாகுபடி

மண் மற்றும் நீர் பரிசோதனை