ஆரோக்யமான வேளாண்மை ஆலோசனைகள்

ஆரோக்யமான வேளாண்மை செய்ய சில ஆலோசனைகள் :

1.தாழ்வான பகுதியிலுள்ள வயல்வெளிகளில் இயற்கை வேளாண்மை செய்வதென்றால் அவ்வயல்களைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்கவேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலங்களில் மற்ற வயல்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படவேண்டும்.

2. இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தும் முன்னர் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் மலட்டுத்தன்மை முதலில் சரியாகும்.

3. விதைகளில் முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களையே பயன்படுத்துதல் நல்லது.

4. அதிக பொருட்செலவில் இடுபொருள்களை இட்டு அதிக மகசூல் என்பதைவிட குறைந்த செலவில் ஆரோக்கியமான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலாப நோக்கத்தை பின்பற்றவேண்டும்.

5.தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறை சிரமங்களை கருத்தில்கொண்டு தெளிப்பு நீர், சொட்டுநீர் மற்றும் மரங்களுக்கு பானையில் திரியிடும் முறை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

6.களைகளை நீக்க மூடாக்கு முறைகளை பயன்படுத்தலாம்.

7.இயற்கைமுறைகளில் பூச்சிக்கொல்லிகள் அல்லது பூச்சிவிரட்டிகளை நாமே தயாரித்தல் வேண்டும்.

8.உப தொழிலாக விவசாயத்தின் உற்ற நண்பர்களான கால்நடைகள் வளர்க்கவேண்டும். அதிலும் நாட்டு ரகங்களை தேர்வு செய்தல் மிகவும் நல்லது.

9. பயிர்சுழற்ச்சி முறைகள் மற்றும் காலத்திற்கேற்ப பயிர்களை தேர்வு செய்தல் வேண்டும்.

10.பசுந்தாள் உரங்களை பூக்கள் வரும் முன் மடக்கி உழவு செய்து பயன்படுத்தவேண்டும்.

11.அந்தந்த வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தங்களுக்குள் பாரபச்சமின்றி ஒரு சங்கமாக சேர்ந்து வேளாண்மையை வலுப்படுத்தவேண்டும்.

12.வருடம் முழுவதும் பயிர்செய்தலை தவிர்த்து கோடையில் உழுது குறிப்பிட காலங்களுக்கு மண்ணை ஆரவிடவேண்டும்.

13.கோடைக்காலங்களில் அறுவடை முடிந்த வயல்களில் கால்நடைகளை கிடைகள் இட்டு மண்ணின் தரத்தை உயர்த்தவேண்டும்.

14.மழைநீர் தேங்கும் வகையில் கடைசி உழவை குறுக்குவாக்கில் உழுதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

15.உதவியாட்களின் தினக்கூலி உயர்வு மற்றும் ஆட்களின் வரத்து குறைவு ஆகியவற்றிற்கு மாற்றாக இயந்திரங்களை உபயோகிக்கவேண்டும்.

16.கரும்பு போன்ற பயிர்கள் அறுவடை செய்தபின் சருகிற்கு தீயிடாமல் மக்க வைக்கவேண்டும். இதனால் மண்ணிற்கு ஊட்டம் மற்றும் ஈரப்பதம் சேமிப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

17.கிணறு மற்றும் மின்கம்பங்களின் அருகில் நீண்டகால வயதுடைய மரக்கன்றுகள் நடுவதை தவிர்க்கவேண்டும்.

18.வயலுக்கு நீர்பாய்ச்சும்போது அதிகமாக தேக்கிவைத்தல் கூடாது இதனால் பயிர்களின் வேர் சுவாசம் தடைபட்டு வளர்ச்சி குறையும்.

19.பயிர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சாலை முறையில் நடவு செய்யவேண்டும். இதனால் போதிய சூரிய ஒளி கிடைப்பதுடன் அதிக மகசூலும் கிடைக்கும்.

20.பார்கள் அமைக்கும்போது வடிகால் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

21.வாழை,பருத்தி,பப்பாளி போன்ற பயிர்களை அற்புறபடுத்தாமல் நிலத்திலேயே மடக்கி உழுதல் வேண்டும்.

22.விவசாய நிலத்தில் தேவையற்ற பொருள்களை தீயிட்டு எரிக்க கூடாது இதனால் அங்குள்ள மண்புழுக்கள் இறக்க நேரிடும்

 

பிரிட்டோராஜ்- திண்டுக்கல்


Comments

Popular posts from this blog

மிளகாய் சாகுபடி

மண் மற்றும் நீர் பரிசோதனை