நாகரத்தினம் நாய்டுவின் நெல் பயிரிடும் முறை ( ஒரு ஏக்கருக்கு )

1) 2-3 கிலோ நெல் போதுமானது

2) நாற்றுவிடும் நாளுக்கு முந்தைய நாள்  செய்யவேண்டியவை

2.1)  விதை நேர்த்திக்கு  பீஜாமிர்தம் தயாரித்தல் ( 1 கிலோ சாணம் , 1 லிட்டர்  கோமியம் , உயிருள்ள மண் சிறுதளவு, தண்ணீர் 4 லிட்டர் , சுண்ணாம்பு  10 கிராம் ஆகிய அனைத்தையும் நன்கு கலக்கி 12 மணி நேரம் கழித்து பயன்படுத்தவும்).

2.2) காலை 6 மணிக்கு நெல்லை தண்ணீரில் ஊறவைக்கவும் பிறகு மாலை 6 மணிக்கு நெல்லை எடுத்து இறுக்கமாக கோணியில் சுற்றி இருட்டில் வைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர் அதன்மேல் தெளித்து விடவும்.

3) மேட்டுப்பாத்தி தயார்செய்தல் ( 3 அடி அகலம் X 100 அடி நீளம் ) – அரை அடி உயரத்திற்கு மண்ணை உயர்த்தி சமன்படுத்தவும். பிறகு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பர் பரப்பி அதன்மேல் தொழுவுரம்(மக்கிய எரு, மண் புழு உரம் , வெப்பம் புங்கன் புண்ணாக்கு)  கலந்த மண்ணை கால்  அடி உயரத்திற்கு பரப்பவும். முடிந்தவரை பாத்தி மேல் பாதம் படாமல் பார்த்துக்கொள்ளவும்

4) நாற்று விடுதல் – நாற்று விடுவதற்கு 2 மணி நேரத்திற்க்கு முன் பிஜாமிர்த கரைசலை கலந்து நெல்லை நிழலில் உலர்த்தவும். பிறகு பாத்தியின் மேல் நெல் மணிகளை சரிவிகித இடைவெளியில் தூவவும். அதன்மேல் லேசாக வைக்கோலை பரப்பி நீரை தெளிக்கவும் (காலை மாலை இருவேளை ).

4.1) 4-5 நாள் கழித்து  வைக்கோலை எடுத்து நீரை தெளிக்கவும் (காலை மதியம் மாலை மூன்று வேளை ).

4.2) வேப்பம், புங்கன் மற்றும் கடலை புண்ணாக்கு ஒரு கிலோ அளவிற்கு எடுத்து 24 மணி நேரம் 5 லிட்டர் நீரில் ஊரவைத்து வைத்து தெளிக்கவும்.

5) நடவு வயல் தயார் செய்தல்

5.1) மூன்று சால் உழவு செய்து, 4 டன் எரு கொட்டி பரப்பிவிடவும் பிறகு 500 கிலோ அளவிற்கு வேப்பிலை மற்றும் ஈர்க்குகளுடன் பரப்பி சில நாட்கள் காயவிட்டு நிலத்தை சேராக்கவும்.

5.2) வரிசைக்கு 30 செண்டி மீட்டர் மற்றும் 25 செண்டி மீட்டர் பயிர் இடைவெளியுடன் உயிர் மண்ணுடன் நாற்று (ஒன்று அல்லது இரண்டு ) அரை அங்குலத்திற்கு குறைவான ஆழத்தில் நடவு செய்யவேண்டும். 2 மீட்டருக்கு 1 அடி  இடைவெளி விடவும்.

5.3) நடவு செய்த 3ம் நாளில் நீர் பாய்ச்சவேண்டும் , தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலும் நீர் கட்ட வேண்டும்

5.4) 10,30,45-ம் நாள்களில் கோனோ வீடர் மூலம் கலைகளை அழுத்திவிடவும். பிறகு 100 கிலோ மண் பூழு உரம் தூவவும். நூண்ணுட்டச்சத்து பற்றாக்குறை இருந்தால் 20 கிலோ ஆமணக்கு விதையினை நீரில் ஊறவைத்து அரைத்தோ அல்லது இடித்தோ தூவிவிடலாம்

5.5) 20-ம் நாளில் இருந்து 15 நாளுக்கு ஒரு முறை   நீரில் ஜீவாமிர்தம் கலந்து விடவும்.

 

6) நெய் ஜீவாமிர்தம் -10 கிலோ சாணம் , 10 லிட்டர் கோமியம் , 1 கிலோ வெல்லம், 500 கிராம் நெய், 1500 கிராம் கடலை  மாவு, 500 கிராம் புற்று மண்  ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். சாணத்தையும்  நெய்யும் கலந்து 3 மணினேரம் வைக்கவும். பிறகு வெல்லம், மாட்டு சிறுநீர், கடலை மாவு மற்றும் புற்று மண்  கொண்டு கலக்கி 200 லிட்டர் நீரில் சேர்க்கவும். காலை மாலை கலக்கி வரவும். 48 மணினேரம் கழித்து பயன்படுத்தவும்.

7) பூச்சி தென்பட்டால் – 20 லிட்டர் நீரில்  2 லிட்டர் ( 4 நாட்கள் புளித்தது ) மோரை கலந்து தேளிக்கவும் அல்லது நீம் ஆஸ்திர பயன்படுத்தவும்..


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை