விவசாயத்துறையில் சாதிக்கும் சீனா

சீனாவால் நூற்று நாற்பது கோடி மக்களுக்கு எப்படி உணவளிக்க முடிகிறது? அது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறதா அல்லது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உள்ளதா? என்ற கேள்விக்கு திரு. ஜானஸ் டாங்கே என்ற மனிதர் அளித்த பதிலை நமது மக்களுக்காக தமிழில் மாற்றித் தந்து இருக்கிறோம். இவர் சீன வரலாறு மற்றும் சீன புவியியலில் நிறைய ஆர்வமும் ஆழ்ந்த அறிவும் உடையவர். அவருக்கு நமது நன்றிகள்.

சீனத்து விவசாயம்:

சீனா. இந்த நாட்டின் பெயரைக் கேட்டாலே உலகத்தின் மூலை முடுக்குகளிலும் எல்லாரும் சற்றே வியந்தும் கொஞ்சம் எரிச்சலாயும் பார்ப்பார்கள். இந்த நாட்டில் உற்பத்தி ஆகும் பல பொருட்கள் உலகின் எல்லா நாடுகளிலும் சந்தையைப் பிடித்து இருப்பதுடன் அங்கிருக்கும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு சவாலாகவும், சமயங்களில் அச்சுறுத்தலாகவும் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். காலை எழுந்தது முதல் தூங்கும் வரை நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் சீன தயாரிப்புகளே.

பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நாடு மக்கள் தொகையிலும் உலகில் முதல் இடத்தில் இருக்கிறது. (2017 வருட கணக்கீட்டின்படி 139 கோடிகளுக்கு அருகில்). (இந்தியா 134 கோடிகளுக்கு அருகில்).

இவ்வளவு மக்களுக்குத் தேவையான உணவுத் தேவையை சீனா எப்படி எதிர் கொள்கிறது? தனது பொருட்களை உலகமெங்கும் சந்தைப்படுத்தும் சீனா, உணவை இறக்குமதி செய்கிறதா? அல்லது உணவில் தன்னிறைவு அடைந்து உள்ளதா? என்றெல்லாம் ஆராய்ந்த திரு. ஜானஸ் டாங்கே  வெளிப்படுத்திய விவரங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

புவியியல் அடிப்படையில் சீனாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் நடைபெறும் விவசாயம் பற்றிய அவரது பதிவுகள் பின்வருமாறு:

 

பியூஜின் மாகாணத்தின் கடற்கரைப் பகுதி :

மேலிருந்து பறவையின் கோணத்தில் பார்க்கும்போது சிறுசிறு கட்டங்களாக மிதக்கும் வீடுகள்/கூண்டுகள் கடலின் மேற்புறத்தில் எங்கெங்கும் லட்சக்கணக்கில் பரவியிருக்கக் காணலாம். செஜியாங் மாகாணம் முதல் குவாங்டாங் மாகாணம் வரை 1000 மைல் தூரத்திற்கு இவற்றை நெருக்கமாக காணலாம். உண்மையில் அவை சீனாவின் கடல்சார் உணவுகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள். கடலுக்குச் சென்று இயற்கையில் கிடைக்கும் மீன்களை பிடித்து வருவதற்கு பதில் கடலிலேயே தங்கி  நமக்குத் தேவையான உணவினை வளர்த்து உற்பத்தி செய்வதால் குறைந்த செலவில், குறைந்த முயற்சியில் நிறைய மீன்கள், இறால்கள், நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை இருக்கும் இடத்திலேயே பெறுவதுடன் நல்ல இலாபம் ஈட்ட முடிகிறது. கடலில் மட்டுமல்லாது கண்ணில் படும் எந்த நீர்ப்பிரதேசத்தையும் அது ஆறாகட்டும், நீர்த்தேக்கமாகட்டும், அல்லது ஏரிகளாகட்டும் சீனர்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றனர். நல்ல தண்ணீரில் கிடைக்கும் மீன்களையும் இன்னபிற உயிரினங்களையும் வளர்த்து அறுவடை செய்கின்றனர்.

சீனர்கள் எவ்வளவு கடல்சார் உணவினை பயன்படுத்துகின்றனர் என்று பார்த்தால்,

உலக அளவில் கடல்சார் உணவின் ஒரு வருட தேவை மொத்தம் 143.8 மில்லியன் டன்கள். சீனர்கள் மட்டும் இதில் 65 மில்லியன் டன்கள் அதாவது உலக தேவையில் 45 விழுக்காடு உணவை உட்கொள்கின்றனர். 

இந்தியாவும் சீனாவைப் போலவே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்றாலும் சீனா இந்தியாவை விட 12 மடங்கு அதிக கடல்சார் உணவை பயன்படுத்துகிறது. இந்தியாவின் கடற்பரப்பு சீனாவின் கடற்பரப்பை விட அதிகம் இருந்தாலும் சீனாவின் கடல்சார் உணவு உற்பத்தியின் விகிதம் இந்தியாவை  விட அதிகம்.

சீனா உட்கொள்ளும் 65 மில்லியன் கடல்சார் உணவில் 15 மில்லியன் மட்டுமே படகில் கடலுக்குச் சென்று பிடித்து வரப்படுகிறது. மீதமுள்ள 50 மில்லியன் அகுவா கல்ச்சர் முறையில் வளர்க்கப்படுகிறது. அதே சமயம் ஜப்பானில் 90 சதவிகிதம் கடலில் சென்று பிடித்து வரப்படுகிறது.

சீனாவின் இந்த முறையின் பயனாக சாதாரண குடிமகன் வீட்டிலும் தினமும் கடல் உணவு இருப்பது சாத்தியமாகிறது.

அடுத்ததாகநன்ஸுன்ஹுஸோசெஜியாங் மாகாணங்கள்:

இயற்கையின் ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சி – 1

யாங்ட்சு நதிதாய்ஹு ஏரி மற்றும் குயாண்டாங் நதி இவற்றின் வளமையான செறிவூட்டப்பட்ட மண் வளம் மிக்க பகுதியாக இந்த நிலப்பரப்பு இருக்கிறது. அதனால் இங்கு மக்கள் தொகையும் அதிகம். 100 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்தியாவில் வங்காளத்தை போலவும் பங்காளதேசம் மற்றும் வியட்நாம் போலவும் இந்த இடம்  இருக்கிறது. ஆனாலும் சீனா மற்ற நாடுகளைப் போல இல்லாமல், இந்த இடத்தில் அரிசி போன்றவற்றை விளைவிக்காமல், இங்கும் நன்னீர் மீன்கள் போன்றவற்றை வளர்த்து உற்பத்தி செய்கிறது. காணுமிடமெங்கும் மீன் குட்டைகள் செறிந்திருக்க அந்த குட்டைகளைச் சுற்றி நிறைய மரங்கள் இருக்கின்றன. அவை பட்டு வளர்ப்பிற்குகந்த மல்பெர்ரி மரங்கள். கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இப்படி ஒன்றை ஒன்று சார்ந்ததன்னிறைவு பெற்ற விவசாய முறையில் சீனா முன்னணியில் இருக்கிறது. இன்றைய புதிய தொழில் நுட்பங்களின் உதவியுடன் குளங்களில் ஏரேட்டர் மூலம் பிராணவாயு செலுத்துவதும்சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதும்  அதிகம் உள்ளது.

அரசாங்கமே இத்தகைய வசதிகளை நிறுவி பயன்படுத்த வேண்டி விவசாயிகளை ஒரு வகையில் நிர்பந்திக்கவும் செய்கிறது. உலகின் பட்டு உற்பத்தியில் 84%, நன்னீர் மீன் உற்பத்தியில் 66%, சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் 25.8% என்று பன்முகமாக சீனா முன்னணியில் இருப்பது இயற்கைதானே.

இயற்கையின் ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சி – 2

மீன்களும் தாமரைத் தண்டுகளும்:

மீன்களுடன் கூடவே நீரில் வளரும் தாவரங்களில் தாமரையின் தண்டுகள் உணவுக்கானவை. சுவை மிகுந்த இவை சீனர்களின் பிடித்த உணவாக இருக்கின்றன. தாமரைக்கொடியின் தண்டு உற்பத்தியில் உலக சந்தையில் 90% (11 மில்லியன்) சீனாவின் கையில் இருக்கிறது. உலக நாடுகளின் ஏற்றுமதியில் 66% சீனாவிடம்.

இயற்கையின் ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சி – 3

கனோலா(கடுகு) எண்ணெய் – தேனீக்கள் – மீன்களும்நண்டுகளும்:

குளம்குட்டைகளில் சேகரமாகும் வளம்மிக்க வண்டல் மண்ணை சீனர்கள் வருடமொரு முறை அகழ்ந்து எடுத்து குளத்தின் கரைகளில் நிரவி வைப்பார்கள். அந்த வளமான மண்ணில் கனோலா எண்ணெய் விதைகளைப் பயிரிட்டு வளர்க்கிறார்கள். மேலும் டாரோ என்ற கிழங்கினையும் வளர்கிறார்கள். உலகின் 22% கனோலா எண்ணையை சீனா உற்பத்தி செய்கிறது. கூடவேஇந்த எண்ணெய் செடிகளின் பளிச்சென்ற மஞ்சள் நிற பூக்களில் இருந்து தேனீக்கள் மூலம் தேனை சேகரிக்கிறார்கள். இந்த தேனின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தேன் நேரிடையாகவோ அல்லது மூன்றாம் உலக நாடுகளின் வழியாகவோ அமெரிக்காவிற்கு விற்பனை ஆகிறது. அது மட்டும் இல்லாமல் மிட்டன் என்ற மிகுந்த சுவையுள்ள நண்டு வகையும் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இவை சுமாராககிலோ 60 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆகின்றன.

2017 ம் ஆண்டு தேன் உற்பத்தியில்

சீனா – 530000 டன்கள் துருக்கி – 114471 டன்கள் ஈரான் – 69699 டன்கள்;    அமெரிக்கா – 66968 டன்கள் ;  உக்ரைன்  – 66231 டன்கள்ரஷ்யா – 65678 டன்கள் ;    இந்தியா – 64981 டன்கள்.

 

மூன்றாவது பிரதேசம் : ஷாங்குவாங் மற்றும் ஷாண்டாங் பகுதிகள்.

இந்த பகுதி ஒரு பரந்த சமவெளியாகும். இந்த சமவெளியில் பல லட்சக்கணக்கான பசுமைக் குடில்கள் எங்கெங்கும் செறிந்து காணக் கிடைக்கின்றன. எண்ணற்ற வகையான காய்கறிகள்பழ வகைகளை வருடம் முழுவதும் பல முறை சாகுபடி செய்து பலன் பெறுவதே பசுமைக் குடில்களின்  ஒப்பற்ற பயனாகும்.  உதாரணமாக, 52 நாட்களில் விளையும் லெட்டுஸ் வகை தாவரத்தை, வருடத்திற்கு முறைகள் விளைவித்து பயன் பெறுகிறார்கள். சீன அரசு இந்த முறையை விவசாயிகளிடத்தில் வலுக்கட்டாயமாக புகுத்தியதுடன்கடன் உதவிகளையும் வழங்கி ஊக்குவிக்கிறது. இது தொடர்பான கல்வியையும் கட்டாயம் அறிந்து கொள்ள விவசாயிகளுக்கு மறுகல்வி கூடங்களையும் அமைத்திருக்கிறது.

இந்த கல்வி கூடங்களில் பசுமைக்குடில்களில் இருக்கும் சீதோஷ்ண நிலைகரியமில வாயுவின் அளவுமண்ணின் தன்மைசூரிய ஒளியின் அளவு ஆகியவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள கற்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி சீன நாட்டின் மொத்த காய்கறி மற்றும் பழங்களின் நுகர்வு வருடத்திற்கு 700 மில்லியன் டன்கள் ஆகும். இது உலக மொத்த நுகர்வில் 40% ஆகும். இந்தியா 180 மில்லியன் டன்கள். இந்தியாவில் பெரும்– பான்மையான மக்கள் சைவம் என்று சொல்லிக் கொண்டாலும் சீனா இந்தியாவை விட 3.8 மடங்கு அதிக காய்கறிகளையும்பழங்களையும் நுகர்கிறது. சீனாவின் இந்த அசுர உற்பத்தியின் இரகசியம் அவர்களுடைய பசுமைக்குடில்கள்தாம். இன்று பலவிதமான காய்கறிகள்பழங்கள் போன்றவற்றை பெருமளவிலும் குறைந்த விலையிலும் சீன மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது சாத்தியப்பட்டது பசுமைக் குடில்களால் தாம். மற்ற நாடுகளைப்  பார்க்கிலும் பல மடங்கு அதிக உற்பத்தி செய்வதன் மூலம் தனக்கு அடுத்ததாக உள்ள நாட்டை விட பெரிதும் முன்னணியில் இருக்கிறது சீனா.

அதன் சாதனைக்கு ஒரு உதாரணம்:

தர்பூசணி உற்பத்தி 2016 ல்    

சீனா                                  79.2    மில்லியன் டன்கள்

துருக்கி                           3.9        மில்லியன் டன்கள்

ஈரான்                               3.8        மில்லியன் டன்கள்

பிரேசில்                        2.0        மில்லியன் டன்கள்

ஜப்பான் நாட்டில் ஒரு தர்பூசணி 18 அமெரிக்க டாலர்கள் விலை விற்கும்போது சீனாவில் 1.5 அமெரிக்க டாலர்களுக்கு அதைவிட பெரிய தர்பூசணி வாங்க முடியும். உலகத்திலேயே மிகவும் சுவையான தர்பூசணி ஜின்ஜியாங் மாகாணத்தில் கிடைப்பதுதான்.

நான்காவது பிரதேசம் : லாஸாதிபெத்

நான்காவது அறிமுகம் திபெத்தில் இருக்கும் பசுமைக்குடில்கள். கூகிள் மேப்பில் பார்த்தால் திபெத் முழுக்க பசுமைக்குடில்கள் பரவி இருப்பதைக் காணலாம். திபெத்திய பீடபூமியில் வாழும் மக்கள் தினசரி கோவில்களுக்குக் கூட போக முடியாமல் பசுமைக் குடில்களை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கடவுளைக் கூட வணங்காமல் தக்காளி வளர்க்கும் திபெத்தியர்களை எண்ணி அவர்களின் மதத்தலைவர் தலாய் லாமாவிற்கு மிகவும் வருத்தம். இதன் பயனாககடந்த 10 வருடங்களாக திபெத்தில் காய்கறிகளின் விலை 90 சதம் சரிவடைந்த நிலையில் இருக்கிறது. அவர்கள் பக்கத்து நாடுகளில் இருந்து எதையும் வாங்கத் தேவையில்லை. யாக் என்ற மாட்டின் பால்அதன் பாலாடைக்கட்டி, இறைச்சி மற்றும் ரொட்டி இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்திருந்த திபெத்தியர்கள் அவர்களின் கோவில்களில் இருக்கும் குருமார்கள் மட்டும் எப்போதேனும் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் தர்பூசணி போன்றவற்றை சாப்பிட்டே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஐந்தாவது பிரதேசம் : காக்தலாஇலிஜின்ஜியாங் பகுதிகள்

கசகஸ்தானை ஒட்டிய சீனாவின் மேற்குப் பகுதி இது. கஜகஸ்தான் பகுதியில் பெரும்பாலும் தரிசாககட்டாந்தரையாக இருக்கும் மலைகள் சூழ்ந்த இந்த நிலப்பகுதிசீனாவின் ஆதிக்கம் உள்ள இடத்தில்  மிகவும் பசுமையாக காணப்படுகிறது. சுற்றியுள்ள பனிமலைகளில் இருந்து உருகி வரும் நீரை மட்டுமே நம்பி இருப்பதாலும்நிலத்தின் தன்மை கடுமையான அமிலத்தன்மையாக இருப்பதாலும், இந்தப் பிரதேசம் பெரும்பாலும் கைடவிடப்பட்ட நிலமாகவே இருந்தது. விவசாயம் செய்வதென்றால் மிகவும் செலவு பிடிக்கும். அப்படியே செய்தாலும் விளைச்சலை வாங்கசந்தைப்படுத்த வழி இல்லாததாலும் கஜகஸ்தான் மக்கள் தங்களால் மண்ணை அப்படியே விட்டு விட்டார்கள். ஆனால்சீன அரசின் XPCC (XINJIANG PRODDUCTION AND CONSTRUCTION CORPORATION) என்ற அமைப்பு (இதற்கு இராணுவ பின்புலமும் உண்டு) 2.6 மில்லியன் ஊழியர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட ஒரு அசுர இயந்திரமாக இருப்பதால் செலவினை பெருமளவு கட்டுப்படுத்தி, விளைச்சலை நேரிடையாக மற்ற பகுதிகளில் இருக்கும் சந்தைகளுக்கு அனுப்புகிறார்கள். பெரிய அளவில் எண்ணற்ற பசுமைக்குடில்கள் அமைத்து அந்த பகுதியில் வசிக்கும் உகுர்ஸ் மற்றும் ஹான்ஸ் பழங்குடி மக்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்தி இந்த சாதனையை அவர்கள் எட்டி இருக்கிறார்கள்.

கடந்த 30 வருடங்களாக XPCCசீன மாணவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி அங்கிருக்கும் விவசாயம் சார்ந்த உயர் தொழில் நுட்பங்களை கற்று வரச்செய்கிறது. சீனாவில் இருக்கும் பாலைவனப்பகுதிகளில் இந்த மாணவர்கள் தாங்கள் பயின்று வந்த கல்வியை பயன்படுத்தி நவீன உத்திகளுடன் விவசாயம் செய்கிறார்கள். தங்கள் முயற்சி வெற்றியடைந்ததும் அங்கிருக்கும் பூர்வகுடிகளுக்கு (உகுர்ஸ்ஹான்ஸ் மற்றும் கஸக்குகள்) நிலத்தை விற்று விடுகின்றனர் அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். இந்த பகுதி மக்கள் சீன அரசின் மறுக்கல்வி மையங்களுக்கு அனுப்பப்பட்டுஅவர்களுக்கு அங்கு நவீன விவசாய முறைகள்  கற்பிக்கப்படுகின்றன. கூடவே சீன மொழியும்.

சீன அரசின் கம்யூனிச கட்சியின் பிரதிநிதி ஒருவர் மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் நவீன விவசாய முறைகள் சரிவர பின்பற்றப் படுகின்றனவா என்று கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தக்காளிதிராட்சைமிளகாய்தர்பூசணிபருத்தி ஆகியன பயிரிடப்படுகின்றன. இவை இங்கு விளையும் கோதுமையை விட அதிகம் வருமானம் தரக்கூடியவை.

இந்தப்பகுதியில் நிலவும் கடும் வெப்பமும்இரவில் கடும் குளிரும் இங்கு விளையும் பொருட்களுக்கு நல்ல சுவையைத் தருவதால் விவசாயிகள் நல்ல வருமானம் பெறுகிறார்கள்.

ஜின்ஜியாங் பகுதியின் மொத்த விளைச்சல் இந்த பகுதியின் உள்ளூர் தேவையை விட மிக அதிகமாக இருப்பதால்இந்த விவசாயிகள் நட்டமடையாமல் இருக்கXPCC யானது அவர்களது விளைச்சலை உலக அளவில் எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்கிறது. (இந்திய அரசு இதை கவனிக்க வேண்டும். வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில் வேதனைப்படும் விவசாயிகளுக்கு இது போல உதவி செய்ய வேண்டும்.)

XPCC சீன அரசின் ‘SUPER POWER’ அந்தஸ்த்தைப் பயன்படுத்தி உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தங்கள் விளை பொருட்களை (கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி) விற்கின்றனர். அவர்களது மற்ற நாடுகளுடனான உடன்படிக்கைகளில் இருக்கும் விதிமுறைகள் தட்ட முடியாத அளவில் இருக்கும். இப்படி செய்வதை சீனா அமெரிக்காவிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா காலம் காலமாக இப்படித்தான் தனது பொருட்களை மற்ற நாடுகளின் தலைகளில் கட்டி வருகிறது.

எப்போதெல்லாம் ஜி ஜின்பிங் (சீன அதிபர்) வெளிநாடுகளுக்குச் செல்கிறாரோ அந்த நாடுகளில் எல்லாம் FREE TRADE உடன்படிக்கைகள் மூலம் (உள்குத்து நிறைய இருக்கும்)சந்தைகளை கையகப்படுத்துவது அவரது கடமை.

மேற்படி செய்தியை நீங்கள் நம்பாமல் போனால்அடுத்து வருவதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

ஆறாவது பிரதேசம் :ஹெஜிங்(HEJING), பேயின்கோல்(BAYINGOL), ஜின்ஜியாங்(XINJIANG) 

பாலைவனத்தின் நடுவில் தக்காளித் தோட்டங்கள் :

கோடிக்கணக்கான தக்காளிகள் அந்த பிராந்தியத்தியே சிகப்பு நிறமாக மாற்றியிருக்கும் காட்சியைக் காண, நீங்கள்  கூகிள் மேப்பில் மேற்படி ஊர் பெயர்களை தட்டி தேடித் பாரக்கலாம். எங்கெங்கும் தக்காளி தோட்டங்கள் பரவிக்கிடக்கின்றன.

உலகளவில் தக்காளி உற்பத்தி விவரம்:

சீனா                                                                  –         56.3 மில்லியன் டன்கள்

ஐரோப்பிய ஒன்றியம்                            –    24.2 மில்லியன் டன்கள்

இந்தியா                                                        –        18.4 மில்லியன் டன்கள்

அமெரிக்கா                                                  –        13.0 மில்லியன் டன்கள்

துருக்கி                                                           –     12.6 மில்லியன் டன்கள்

எகிப்து                                                            –      7.9 மில்லியன் டன்கள்

இத்தாலி நாட்டின் ஸ்பகெட்டிதுருக்கியின் கெபாப்அல்லது HEINZ KETCHUP-ஐ பயன்படுத்த நேர்ந்தால் ஜின்ஜியாங்கின் தக்காளி சுவையை சுவைக்க நேரிடும். இந்த நாடுகளுக்கு சீன தக்காளிகள் நேரிடையாக சென்றிருக்கா விட்டாலும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து மேற்படி நாடுகளை சென்றடைந்து விடும்(சீனாவின் தேனைப்போல).

உலகின் முதல் 10 KETCHUP நிறுவனங்களில் சில கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன.

COFCO GROUP (CHINA) 2ம் இடம்

XINJIANG  CHALKIS CO LTD (CHINA) 3ம் இடம்

FUYUAN AGRI PRODUCTS  LTD (CHINA) 6ம் இடம்

HEINZ (UNITED STATES ) 7வது இடம்

XINJIANG TIANYE CO LTD ((CHINA) 15ம் இடம்

இந்த நிறுவனங்கள் அனைத்தும் XPCC ன் பொருட்களை வாங்கி விற்கும் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தங்கள் இலாபத்தின் பெரும்பகுதியை ஜின்ஜியாங் விவசாயிகளுக்கு வழங்கி விடுகின்றன.

ONE BELT ONE ROAD என்ற சீனாவின் ஐரோப்பாவை நோக்கி போடப்படும் சாலை வழி முயற்சியின் மூலம் கிழக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடியாக நுழைய சீனா முயல்கிறது. சீன அதிபர் சென்ற மார்ச் மாதத்தில் இத்தாலி சென்று வந்தது கூட இதன் தொடர்ச்சியாக இருக்கலாம். ஆனால்ஐரோப்பிய உலகம் இதைப் பற்றி வாய் திறக்காது.

தக்காளிமிளகாய் மட்டுமில்லாது உலகின் திராட்சை உற்பத்தியில் 19.1 % சீனாவின் கையில் இருக்கிறது. ஜின்ஜியாங்ல் உள்ள துர்பான் நகர திராட்சை உலகத்தரம் வாய்ந்தது.

கடைசியாக,

அரிசிகோதுமைசோளம் போன்ற முக்கிய உணவுப் பொருட்களைப் பார்ப்போம். மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் இவை முக்கிய உணவுப் பொருட்களாகும். அப்போதுதான் பால்முட்டைஇறைச்சி ஆகியவற்றை நிறைய பெற முடியும்.  இந்தியாவை விட விவசாய நிலம் குறைவாக உள்ள சீனாஇந்தியாவை விட இந்த மூன்றையும் அதிகம் உற்பத்தி செய்கிறது. இருந்தாலும்1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின்  தனி மனித நுகர்வு விகிதம் வளர்ந்த மேலை நாடுகளை விட குறைவுதான். அதல்லாமல்சீனாவின் இன்றைய நிலை என்னவெனில்விவசாய நிலங்கள் வேகமாக வீடுகளாகஊர்களாக மாறி வருவதுதான். விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளும்நகரங்களுமாக (இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது) மாறி வருகின்றன.

ஏழாவது பிரதேசம் : சீனாவின் வடக்கில் உள்ள சமவெளிப்பகுதி:

இங்குதான் சீனாவின் பெரும்பான்மையான பயிர்கள் விளைகின்றன. இங்கும் மிக வேகமாக விளைநிலங்கள் வீடுகளாகநகரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. சீன அரசு பெரும் முயற்சி எடுத்து தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. வருடத்திற்கு 3000 சதுர கிலோமீட்டர் நிலம் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.

எட்டாவது பிரதேசம் : கிங்கியாங்(QINGYANG)கான்சு மாகாணங்கள் :

விவசாய நிலங்களின் பற்றாக்குறைதான் இன்றைய சீனாவின் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. மா சே துங் காலத்திலிருந்தே சீனா பெரிய அளவில் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது. அவற்றில் லோஸ் பீடபூமியும் ஒன்று. 640,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட இந்தப் பீடபூமி விவசாயம் செய்வதற்கு சிறிதும் ஏற்றது இல்லை. ஆனால்அவற்றையும் பண்படுத்தி மடிப்புமடிப்புகளாக சரிவுகளை மாற்றியமைத்து அணைத்து மடிப்புகளிலும் பயிரிட்டு உள்ளார்கள். ஆனாலும்1999-ம் ஆண்டிற்குப் பின் இந்தப் பகுதியில் விவசாயம் பெரிதாக வளரவில்லை. மாறாகபருவ காலங்களில்பெரும் வெள்ளங்களையும்நிலச்சரிவுகளையும் அதனால் தாங்க முடியாத நட்டங்களையும் சந்திக்க வேண்டி வந்தது. அதன் பின்னர்இந்த பகுதியில் விவசாயத்தைக் கைவிட்ட சீனாமறுபடியும் காடு வளர்ப்பில் இறங்கியுள்ளது. விவசாயிகள் மரங்களை நட்டு வளர்க்க வற்புறுத்தப் படுகிறார்கள். கைமாறாகஅவர்களுக்கு சீன அரசே பணம் கொடுத்து உதவுகிறது. இன்று இந்த பகுதியே காடாக மாறியிருப்பதை காண முடிகிறது. நிலைக்கும் வேளாண்மை பற்றி சீன அரசு கற்றுக்கொண்டு விட்டது.

சீனாவின் இந்த மாற்றத்திற்காகவே சீன மக்கள் அதிபர் ஜி ஜின்பிங்-ஐ மிகவும் விரும்புகிறார்கள்.  ஜி ஜின்பிங் சொல்கிறார்:

இயற்கையின் சமநிலையை பேணுவதற்கும்சுற்றுச் சூழலை காப்பதற்கும் சீனா முக்கியத்துவம் தருகிறது. செழிப்பான பெரும் மலைகளும்தெளிந்த நீரும் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. மனிதர்களும்இயற்கையும் ஒன்றிணைந்து இணக்கமாக வாழ்வதற்கு நாடு ஆவண செய்கிறது. இயற்கை சார்ந்தபசுமையான நிலைத்த விவசாயத்துடன் கூடிய முன்னேற்றத்தை எப்போதும் உறுதி செய்ய விரும்புகிறது.”

ஜி ஜின்பிங்கின் இந்த வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை. மெயின் லேண்ட் சீனாவில் வாழும் மக்கள் ஜி ஜின்பிங்கை இன்னமும் ஏன் விரும்புகிறார்கள் என்றால்அவர் சீனாவின் அதிகாரத்துவ போக்கைசுற்றுச் சூழல் சார்ந்ததாக மாற்றி அமைத்ததும் ஒரு முக்கிய காரணம்.

உதாரணமாகஎங்கேனும் சுற்றுச் சூழல் சீர்கேடு காணப்பட்டால்உள்ளூர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக் கூட சுற்றுச் சூழல் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ‘RETURNING FARM LAND TO FOREST PROGRAM’, — ‘விளைநிலங்களை காட்டிற்கே திருப்புவோம்‘ என்ற அவர்களது திட்டம்பற்றாக்குறையாக இருக்கும் சீனாவின் விளைநிலங்களை இன்னமும் குறைத்து விடும் என்றாலும்விவசாய தொழில்நுட்பத்துறையில் அவர்கள் செய்துள்ள மிகப்பெரிய முதலீடு மற்றும் அதிகரித்து வரும் திறன் மேம்பாடு ஆகியவை உள்ளூர் உற்பத்தியின் அளவினை மேலும் உயத்துவதாகவே உள்ளன.

உதாரணமாக,

ஒரு சீனர், தனது 87வது வயதில்கடல் நீரில் நெல்மணி விளைவிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார்.  இதன் மூலம் சீனாவின் பெரும் ஜனத்தொகைக்கு உணவளிக்க முடியும். ஆனால்என்னதான் விளைச்சல் அதிகரித்தாலும் அரிசிகோதுமைசோளம் இவற்றில் சீனா முழு தன்னிறைவு அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னமும் 10 சதவிகிதம், மேற்படி தானியங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது சீனா. இருந்தாலும்இறக்குமதி செய்யப்படும் அத்தனையும் மனிதர்களின் உணவாக மாறுவதில்லை.

உதாரணமாகபீர் மற்றும் பைஜூ என்ற சீன வகை மது தயாரிப்பிற்கும் இவை பயன்படுகின்றன. 2006ம் ஆண்டு முதல் பீர் உற்பத்தியில் உலக அளவில் சீனா முன்னணியில் இருக்கிறது. அமெரிக்காவின் பீர் உற்பத்தியை விட இரு மடங்கு அதிகமாக சீனா உற்பத்தி செய்கிறது. இதற்காககோதுமை மட்டுமல்லாதுஹாப் பிளான்ட் என்ற தாவரத்தின் பூக்களையும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த பூக்கள் பீருக்கு கசப்பையும்மணத்தையும்திடத்தையும் அளிக்கின்றன.

ஸ்பிரிட் ஆல்கஹால் உற்பத்தியிலும் சீனா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தத்தில், சீனாவில் இருக்கும் குடிகாரர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிக அதிகம். இதிலும் சீனாவே முன்னணி வகிக்கிறது.

இரண்டாவது உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்அரிசிசோளம்கோதுமை ஆகியவை பன்றி வளர்ப்பிற்கும் பயன்படுகின்றன. இந்த தானியங்களை மற்ற நாடுகளிலிருந்து சீனா இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. உலக அளவில் சீனாவில்தான் பன்றிக்கறி மிகவும் விரும்பி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதல்லாமல்அமெரிக்காபிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோளத்தை மட்டுமே உணவாக கொடுத்து இந்த பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளும்ஆடு மாடுகளும் கூட அவ்விதம் வளர்க்கப்படுகின்றன.

இறுதியாகஎல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போதுதனது மக்களுக்குத் தேவையான உணவினை தானே உற்பத்தி செய்து கொள்ளும் நிலையில் சீனா வலுவாக இருப்பது புலனாகிறது. அது மட்டுமல்லாதுஅரிசிமற்றும் கோதுமை தவிர, வித விதமான எண்ணற்ற உணவுப்பொருட்களை சீனா உற்பத்தி செய்கிறது. சீனாவின் ஏழை மக்கள் கூட உலகின் வளர்ந்த நாடுகளை விட அதிக அளவில் வித விதமான உணவுகளை உண்ண முடிகிறது. இந்த அளவு சாதாரண மக்களின் நுகரும் திறனையும் அதற்கான எண்ணற்ற வாய்ப்புகளையும் சீனா உருவாக்கி தந்துள்ளதாகஇந்த கட்டுரையின் ஆசிரியர்தனது உலக நாடுகளை சுற்றிய அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறார்.

உதாரணமாக, 8 பேர் கொண்ட ஒரு சீன குடும்பம், 20 வகையான உணவுகளை மேஜையில் பரப்பி வைத்து உட்கொண்டால், 150 அமெரிக்க டாலர்கள் செலவு ஆகும். அதையேஜப்பான் மற்றும் வளர்ந்த மேலை நாடுகளில் சாப்பிட்டால், 300 அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவு ஆகும் என்பது மட்டுமல்லஅந்த நாடுகளில் பெரும்பாலோனார்க்கு அத்தகைய வாங்கும் திறன் இல்லை என்பதே உண்மை. ஆனால்சீனாவில் இந்த காட்சி சர்வ சாதாரணம். இதுவேஅந்த நாட்டின் வெற்றிக்குச் சான்று.

நாம் விவசாயம் அல்லாத துறைகளைப் ஒப்பிட்டுப் பார்த்து நேரத்தினை வீண் அடிப்பதை விடுத்துநமது வேளாண்மை துறையில் மற்ற நாடுகள் அல்லது அருகில் உள்ள மாநிலங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதை கவனித்து, நாமும் நமது வேளாண்மையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற துறைகளில் அரசின் உதவியை எதிர் பார்த்திராமல்அந்நிய செலாவணியை முதலீடு செய்துநல்ல நிலையில் இருக்கிறார்கள். உற்பத்தி மட்டும் அல்லாமல் தொழில் நுட்பம்மதிப்பு கூட்டுதல்சந்தை படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே நாம் வரும் காலத்தில் விவசாயத் துறையில் வெற்றி அடைய முடியும்.

நன்றி: திரு. ஜானஸ் டாங்கே

தமிழ் மொழியாக்கம் –  நாகராஜ், சென்னை


Comments

Popular posts from this blog

மிளகாய் சாகுபடி

மண் மற்றும் நீர் பரிசோதனை