தரமான மக்கு உருவாக்குதல்

பொதுவாக மக்கு இரண்டு வகைகளில் உருவாக்கலாம்
1) குளிர்ந்த (அ) சாதரண முறையில் தாவரம்( 3 பங்கு) மற்றும் விலங்களின் ( 1 பங்கு) கழிவுகளை நிழலான நீர் தங்காத இடத்தில் கொட்டி 6 அல்லது 12 மாதம் கழித்து பயன்படுத்துதல்
2) வெப்ப முறையில் 18-20 நாட்களில் உருவாக்குதல்(Berkeley method)

2.1) தோரயமாக அரை அடி ஆழம் 1.5 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலத்திர்கு சமமாக எடுக்கவும்.
2.2) காய்ந்த புல், பசுந்தலை, உணவுக் கழிவுகள், முட்டை ஓடு, மீன் கழிவு அனைத்தையும் கலந்து (1 பங்கு பச்சை 2 பங்கு உலர்ந்த கழிவு) நீர் செலுத்தி ஒரு மீட்டர் உயரத்திர்கு குவித்து வைக்கவும். குழியின் நடுவில் காற்று சென்றுவர குச்சியின் மூலம் துளையிடவும். தென்னை ஓலை கொண்டு மூடி வைக்கவும்.
2.3) முதல் 4 நாட்கள் ஒன்றும் செய்யவேண்டாம். 4ம் நாளில் இருந்து 2 நாட்களுக்கு ஒரு முறை திருப்பி போடவும்
2.4) அனைத்தும் சரியாக நடந்தால் 18 நாட்களில் தரமான மக்கு உருவாகிவிடும் ( சில சமயம் நாட்கள் சற்று கூடுதல் ஆகும்.
2.5) மக்குகள் சேதரம் இல்லாமல் மற்றும் களை விதை மட்டுபடுத்தப்பட்டு தரமானதாக இருக்கும்
2.6) கழிவுகள் முறையெ – கார்பன்:நைட்ரஜன்(30:1) நன்றாக இருக்கும்

கழிவுகளின் ஒப்பீடு (கார்பன்:நைட்ரஜன) – மரத் துண்டு (400:1), மரத்துள்(350:1), காய்ந்த இலை ( 60:1), வைக்கோல் மற்றும் மக்கா சோளத்தட்டு (75:1), வேர்கடலை தொட்டு மற்றும் பழக்கழிவு(35:1), சாம்பல் மற்றும் மரம் ( 25:1), பசுந்தலை மற்றும் களை(25-30:1), உணவு கழிவுகள் ( 20:1), கடல் பாசி( 19:1), மாடு சாணம்(16:1), கோழி எரு (12:1), மீன்( 7:1), கோமியம்(1:1)


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை