தென்னை நீரா, பதநீர்
19/04/2017 அன்று தமிழக அரசு நீராவுக்கு அனுமதி அளித்ததை ஒட்டி உயிர்நாடி குழுவின் உறுப்பினரான திரு அசோக்குமார் கார்கூடல்பட்டி 20/4/2017 அன்று நீரா எவ்வாறு எடுப்பது பதநீர், கல்பரசா ஆகியன பற்றி தனது கருத்தை பகிர்த்துள்ள விவரம்.
நான் சென்ற வருடம் 19 – 7 – 16 அன்று கேரளா மாநிலம் காசர்கோடில் உள்ள ICAR- CPCRI தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பயிற்சியில் சுமார் 15 நபர்கள் கலந்து கொண்டோம். இலவச பயிற்சி என்றாலும் நமக்கு 1 நாளில் எந்த அளவிற்கு பயிற்சி அளிக்க முடியுமோ அவ்வளவு பயிற்சி கொடுத்தார்கள்.
முக்கியமாக அன்று அவர்கள் நமக்கு தென்னையில் பதநீர் (நீரா) எடுத்து அவற்றை மதிப்பு கூடி விற்க விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்பதை எடுத்து சொல்லி மேலோட்டமான பயிற்சியும் கொடுத்தார்கள்.
அதில் சிலவற்றை இன்று பகிர விரும்புகிறோம்.
நீரா என்ற பதநீர் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.
இதில் குளுக்கோஸ் அளவு மிக அதிகம். அதனால் சுலபமாக நொதித்து விடும். இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பிருந்தே தென்னையில் இருந்து பதநீர் எடுத்து அதில் சக்கரை தயார் செய்து பயன்படுத்தி வந்தார்கள்.
பிறகு அறிமுகம் செய்யப்பட்டதே கரும்பு.
இந்தியா மட்டுமே தென்னையில் இருந்து எண்ணெய் எடுப்பது ஒன்றை மட்டுமே கடைபிடிக்கிறது ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கை போன்ற நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காயில் இருந்து குறைந்த அளவே எண்ணெய் எடுத்து சந்தை படுத்துகிறார்கள். தவிர வேறு நிறைய மதிப்பு கூட்டு பொருட்கள் தயார் செய்வதால் தேங்காய் விலை சம நிலை அடைகிறது ஆனால் இங்கு நாம் 80% எண்ணெய் ஒன்று மட்டுமே நம்பி இருப்பதாலும் எண்ணையில் கலப்படம் செய்வதை தடுக்க இயலாத நிலை உள்ளதாலும் தேங்காய் விலை மிக குறைவாகவே உள்ளது.
நீரா உற்பத்தியில் பழங்காலத்தில் சுண்ணாம்பு உபயோக படுத்தப்பட்டு வந்தது. அன்றைய மனித உழைப்பு, நடைமுறை,உணவு பழக்க வழக்கத்திற்கு ஒத்து போனது ஆனால் இன்றைய சூழலில் சுண்ணாம்பு பயன்படுத்துவது தவறு என்பது நிபுணர்கள் கருத்து.
அதன் விளைவாக பதநீர் எடுக்க சற்று சிரமப்பட வேண்டிய நிலை.
பொதுவாக பதநீர் புளிக்க மூன்று முக்கிய காரணங்கள்.
- Microbial fermentation
அதாவது நுண்ணுயிரிகள் பதநீரில் உள்ள அதிகப்படியான சக்கரை தன்மையை உணவாக கொண்டு வெகு விரைவாக பெருகி புளிக்க வைத்து விடுகிறது.
- Enzymatic fermentation.
பதநீரில் உள்ள புரத தன்மை அதை விரைவாக புளிக்க வைக்கிறது.
- Chemical fermentation.
அதில் உள்ள தாது உப்புக்கள் சேர்க்கை மூலமாகவும் புளித்து விடுகிறது.
Yeast ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என சொல்லலாம். இதன் PH value 7 க்கு கீழாக வைத்து இருக்க வேண்டும். அதிகமாக பயன் படுத்தும் போது yeast வேகமாக வளர்ந்துவிடும். பாக்டீரியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுண்ணாம்பு பயன்படுத்தும்போது குடல் புண்(ulcer) ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இதில் volatile components அதிகமாக இருப்பதால் பூச்சிகள் வாசனை காரணமாக விரைவாக நெருங்கிவிடுகிறது அதனால் அசுத்தம் அடைய வாய்ப்பு உள்ளது. அதனால் சுத்தமாக தயார் செய்ய தென்னை வாரியம் பரிந்துரை செய்கிறது. மேலும் புளிக்காமல் இருக்க சுண்ணாம்பு பயன்படுத்தினால் அது சரியான அளவில் பயன்படுத்த தவறுவதால் பின் விளைவுகள் அதிகமாகிறது. சுத்தமான பதநீர் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கவேண்டும். அதுவே வேதியியல் மாற்றம் இல்லாத நீரா. இந்த நீராவை தயாரிக்க ப்ரித்யேக பெட்டி தயாரித்து இருக்கிறது தென்னை வாரியம். 5° க்கு குறைவாக அதன் சுற்றி தட்ப வெட்ப நிலை வைத்து இருக்க அதில் 0% ஆல்கஹால் என கொள்ளலாம்.
கடை பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.
- மரம் தரமானதாக இருக்கவேண்டும்.
- இளமையானதாகவும் இல்லாமல், முதலாகவும் இல்லாமல் நடுத்தர பாலை தேர்வு செய்ய வேண்டும்.
- பாலையில் அடிப்புரம் சற்று புடைத்து இருக்க வேண்டும். அதாவது இதை ஸ்டேஜ் 8 என குறிப்பிடுவார்கள்.
- அடி பாலை வீங்கி இருக்கும்.
- வெடிக்க 10 நாட்கள் இருக்கும் பாலையாக இருக்க வேண்டும் .
- அடி பாலை கயிறு போட்டு கட்டி விட்டு பிறகு பாலையில் மேல்புறம் குச்சி கொண்டு தட்டி விட வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் தட்டி விட வேண்டும்.
- அப்படி தட்டி விடும்போது உள்ளே உள்ள பூ இலகுவாக இருக்கும்.
தட்டும்போது இலகுவாக தட்டவேண்டும் இல்லை என்றால் பாலை வெடித்து விடும். தட்டுவதற்கு மாட்டு எலும்பு பயன்படுத்தலாம்.
பாலையில் மேல்புறம் சீவி விட வேண்டும்.
நீரா உடனே வராது. சீவி விட்ட இடத்தில களிமண் தடவி விட வேண்டும். 4 நாட்கள் கழித்து நீரா வர ஆரம்பிக்கும். அப்படி வரும்போது அதற்கென செய்து வைத்துள்ள ஒரு pvc அடாப்டர் போட்டு பைப்பை பொருத்தி அதை பெட்டியினில் உள்ள பையில் கொண்டு விடவேண்டும். அந்த பை சுற்றி ice cubes இருப்பதால் புளித்து விடாமல் பாதுகாக்க படுகிறது.
இப்போது பதநீர் எடுப்பதால் என்ன லாபம் என்று பார்க்கலாம்.
ஒரு பாலையில் ஒரு நாளைக்கு 1500 ml நீரா எடுக்கலாம்.
தொடர்ந்து 45 நாட்கள் எடுக்க முடியும். அப்படி எடுக்கும் பட்சத்தில் சுமார் 70 லிட்டர் நீரா ஒரு பாலையில் 45 நாட்களில் எடுக்க முடியும்.
இளநீரை விட இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் 5 மடங்கிற்கு மெல்.
இதன் ஒரு லிட்டர் விலை ரூ.125.00.
நிறைய சத்துக்கள் உரி மட்டைகளை சென்று விடுவதால் இளநீரில் இதை காட்டிலும் குறைந்த சத்துக்களே உள்ளன. பாலை கடைசி வரை எடுக்கலாம்.
கணக்கு.
70 லிட்டர் × 125 = 8750.00
45 நாட்களில் ரூ.8750.00
1 வருடத்திற்கு
8× 8750.00 = ரூ.70000.00
1 மரத்திற்கு ரூ.70000 என்றா50 மரம் பார்த்தல் ரூ.35,00,000
இதில் 5 லட்ச ரூ. செலவு செய்தாலும் ரூ. 30,00,000 வருமானம் வரும் என்று தென்னை வாரியம் நமக்கு எடுத்து சொல்கிறது.
இது ஒரு தோரையமான் கணக்கு. நல்ல செல்வாக்கான மரத்தில் திடமான பாலையில் வரும் நீரின் அளவை சொல்லி இருக்கிறார்கள்.
நாம் இதில் 50% தை கணக்கில் எடுத்து கொள்ளலாம்.
ஒரு சராசரி கணக்கு எனன சொல்கிறார்கள் என்றால்.
ஒரு லிட்டர் இல் விவசாயியின் முதலீடு ரூ 30 என்கிறார்கள்.
மரம் இருப்பவருக்கு 1 லிட்டர் இல் ரூ.25. கொடுக்கப்படுகிறது.
ஆக ரூ 125 – 30 – 25 = ரூ.70/- என்பது ஒரு லிட்டர் ன் நிகர லாபமாக சொல்ல படுகிறது
இந்த நீராவில் வைட்டமின் சி 20 mg உள்ளது. இதை காய்ச்சி ஒரு
பானம் தயார் செய்கிறார்கள் அதன் பெயர் கல்பரசா / Kalparasa.
ஆனால் கொதிநிலை அடையும் போது அதில் உள்ள வைட்டமின் சி போய்விடும். மேலும் நீராவிற்கென இருக்கும் ப்ரித்யேக வாசனை இராது.
அதனால் நீரா பருக ஒரு வகை சத்தும், kalparasa பருகும்போது ஒருவகை சத்தும், காய்ச்சி சக்கரசியாக எடுக்கும்போது இரும்பு மற்றும் இதர தாதுக்கள் அடங்கிய சத்தும் கிடைக்கும் ஒரு சிறந்த பொருளாக கிடைக்கிறது.
இதில் சில தவறுகள் இருக்கலாம். இருப்பின் திருத்தி கொள்கிறேன்.
நமக்கு இந்த பயிற்சி எடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திரு. கண்ணன் கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் திரு.கிருஷ்ணகுமார் கோபிச்செட்டிப்பாளையம் அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை சொல்லி கொண்டு நமது குழு நண்பர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்த திரு. கணேஷ் அவர்களுக்கு நன்றி கூறி எமது கட்டுரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.
பயிற்சியில் கலந்து கொண்ட உயிர்நாடி குழு உறுப்பினர்களுடன் துணை வேந்தரும்.

Comments
Post a Comment