வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டுதல்
31-12-2016 அன்று வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதல் பற்றி நடைபெற்ற விவாதத்தின் தொகுப்பு.
தனிப்பட்ட முறையில் இந்த தலைப்பு எமக்கு மிகவும் பிடிதமான ஒன்று. நாம் சற்று முன்னோக்கி பார்க்க வேண்டும். ஒரு தலைமுறை என்பது 30 வருடங்கள். அதன்படி 3 முதல் 5 தலைமுறை மட்டும் முன்னோக்கி சென்று ஒப்பிட்டு பார்க்கலாம்.
சுமார் 90 முதல்120 வருடங்கள் முன்பாக நாம் நமது முன்னோர்களை விசாரித்து பார்க்க உணமை நிலை நமக்கு புரியும். அக் கால கட்டங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதல் மிக சிறப்பாகவே நடந்து வந்தது காரணம் நாம் பல முறை விதித்த கூட்டு குடும்ப முறை மற்றும் அவரவர் வேலை அவரவரே செய்து கொள்வது மற்றும் அண்டை நிலத்தாருடன் நல்லுறவு கொண்டு விவசாய பணிகளை பகிர்ந்து செய்வது ஆகிய முறைகளை கடைப்பிடிப்பதன் முலம் மதிப்பு கூட்டுதலும் சந்தை படுத்துதலும் சுலபமான ஒன்றாக இருந்தது.
மேலும் கூட்டு குடும்ப முறையில் பணிகளை பகிர்ந்து செய்து வெற்றி கண்டனர். ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதை நாம் உணர்ந்து விட்டோம். அதன்படி அன்றைய நிலையை நாம் நடைமுறையில் கொண்டுவர நாம் ஒன்றுக்கும் மேற்பட்டோராக இணைந்து செயல்பட வெற்றி நிச்சயம் என்பதை நாம் அவ்வப்போது ஆங்காங்கே சில குழுக்களாக இனைந்து செயல்படும்போது உணர்கிறோம். இன்றைய சூழ்நிலையில் இது போன்று மதிப்பு கூட்டுதலுக்கும் சந்தை படுத்துதலுக்கும் விவசயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுடன் மத்திய மாநில அரசுகள் மற்றும் நபார்ட் ஆகிய துறைகளில் நல்ல பால சலுகைகள் கிடைக்கிறது. விவசாயிகள் அவற்றை சரிவர பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.
சமீப காலமாக உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக உணவு தட்டுப்பாடு வரும் நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே நம்மிடம் உள்ள கூட்டுறவு துறையில் உள்ள சில குறைபாடுகளை களைந்து சில சிறப்பம்சங்களை உள்ளடக்கி மத்திய மாநில அரசு உதவியுடன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் பல வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது. இதன் அடிப்படை சாராம்சம் என்னவென்றால் உழவர்கள் அவர்கள் பகுதியில் சுமார் 1000 நபர்களாக கூடி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தாங்களாகவேமதிப்பு கூட்டி சந்தை படுத்த அவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிமுறைகள் செய்து கொடுக்க படுகிறது. அவ்வாறாக ஒவ்வொருவரும் தலா 1000 ருபாய் என்ற விகிதத்தில் முதலீடு செய்து வங்கி கணக்கில் இடும் பட்சத்தில் மத்திய , மாநில அரசு மற்றும் நபார்ட் ஆகியோர் தங்கள் பங்காக நபருக்கு ரூ 1000 கொடுக்கும் பட்சத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் சேர்ந்து விடுகிறது. அதை முதலீடாக வைத்து தொழில் தொடங்கி நடத்த வழிவகை செய்து தருவதுடன் தொழில் சிறப்பாக நடக்கும் பட்சத்தில் இயந்திரக்ங்கள் வாங்க பபயன்படுத்திய தொகை தள்ளுபடி செய்து தொழில் தடையின்றி நடக்க எதுவாக விளங்குக்குறது.
இதன் அடிப்படையில் பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள உழவர்களாக சுமார் 25 நபர்கள் ஒன்று கூடி கணிசமான தொகையை முதலீடு செய்து கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகிறோம். இங்கு உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நியாயமான விலை கொடுத்து வாங்கி அவற்றை மதிப்பு கூட்டி சந்தையில் சரியான விலைக்கு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். வெற்றி பாதையை நோக்கி எங்களது பயணம் தொடர வேண்டும். இது போன்ற செயல்பாடுகளை சக விவசாயிகளும் பின்பற்றி நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஒவ்வொருவரும் இணைந்து செயலாற்றி வெற்றி காண வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை இந்த புத்தாண்டு தினத்தில் வேண்டிக்கொள்வதுடன் ஏழை விவசாயீ என்ற வார்த்தையை பயன்படுத்தி நம்மை இழிவு செய்யும் இந்த சமூகத்திற்கு சவாலாக விளங்கி நாம் ஏழைகளும் அல்ல கோழைகளும் அல்ல என்பதை நிரூபித்து
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கி அனைவர்க்கும் தாழ்வே என்ற பொன்மொழிகளுக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் அப்படி அந்தந்த பகுதி விவசாயிகள் இனைந்து சிறு குழுக்களாக சேர்ந்து அவரவர் பகுதிகளில் விளையும் பொருட்களை சேர்த்து அவற்றை மதிப்பு கூட்டி பின்னர் அப் பொருட்கள் சரியான இடத்தில் கொண்டு சேர்த்து வியாபாரம் செய்திட சுலபமாக வெற்றி காண முடியும் என்பதை இங்கு தெளிவு படுத்த எண்ணுகிறேன். மேலும் விவசாயிகளை பல பயிர்கள் சாகுபடி செய்ய அவர்களுக்கு வழிகாட்டி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நிரந்தர விலைக்கு வாங்கி நிரந்தர விலைக்கு விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு நம்மிடம் உள்ள தேங்காய் பருப்பு சென்னை மாதவரம் லெமூரியா நிறுவனத்திற்கு நிரந்தர விலையாக ரூ.65.00 இற்கு கடந்த 4 மாதங்களாக கொடுத்து வருகிறோம். அப்படி கொடுத்து வரும் பட்சத்தில் அவர் தாம் தயாரிக்கும் எண்ணெய் யை நிரந்தர விலைக்கு கொடுக்க முடியும். தற்சமயம் இதை ஒரு முன்னோட்டமாக எடுத்து செயல்படுத்தி நடைமுறை சிக்கல்களை களைந்து செயலாற்றி வருகிறோம்.
வரும் புத்தாண்டில் நமது உயிர்நாடி விவசாய குழு மதிப்பு கூடுத்தளிலும் சந்தை படுத்துதலிலும் காலூன்றி சிறப்புற செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார் கார்கூடல்பட்டி அசோக்குமார்.

சென்னையை சேர்ந்த மலர்விழி அவர்கள் இயறக்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டு மாட்டு சாணத்திலிருந்து மதிப்பு கூட்டி விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்து பெண்கள் மூலமாக சாணியில் நொச்சி, துளசி, வேப்பிலை போன்றவை சேர்த்து கோமியத்துடன் பிசைந்து கொசுவர்த்தி தயார் செய்கிறார்கள். இந்த சாண உருண்டை கொசுவர்த்தியாக மட்டுமல்லாமல் அதன் மணம் சுவாசிக்க உகந்ததாகவும் வீட்டுக்கு நல்ல தூய்மையான ஒரு மணத்தை தருகிறது.
இந்த வருடத்தில் இருந்து உங்களிடம் இருந்து வெளியே செல்லும் பொருள் நேரடியாக நுகர்வோருக்கு போகும்படி பாருங்கள் அது எதுவாக இருக்கலாம் விதை அதுவும் பாரம்பரிய விதைகளுக்கு நிறைய தேவைகள் உள்ளது என்று சென்னை கார்த்தி கூறினார்.

ஒரு விவசாயி தான் விளைவிக்கும் விளைபொருட்களை இடைத்தரகர்களுக்கு விற்காமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பது. அதுவே ஒரு மதிப்பு கூட்டல் தான். இது தான் மதிப்பு கூட்டல்ன் முதல் படி என்று சென்னை ஸ்ரீதர் கூறினார்.
Comments
Post a Comment