தென்னை சாகுபடி

தென்னை

தேங்காய் உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் இந்தியா ஆனால்  உற்பத்தி செலவில் கூட முதலிடம் ஆதலால் சந்தை மதிப்பு விட 70-330 விட அதிகம். மற்ற சமையல் எண்ணெய் விலை குறைவாக கிடைப்பதால் உள் நாட்டிலும் விலை இல்லை. இலங்கை, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. தேங்காய் உற்பத்தியை உள்நாட்டில் கணக்கிட்;டால் கேரளா (44.70 சதம்), தமிழ நாடு(20.75 சதம்), ஆந்திரா (12.88 சதம்) மற்றும் கர்நாடகாவில் (10.02 சதம்) விளைவிக்கப்படுகிறது. மேலும் இது பற்றி விவரமாக சென்னை கார்த்தி கூறுவதை பார்ப்போம்.

  • பொதுவாக இரண்டு வகை ரகம் பயிரிடப்படுகிறது. ஒன்று நெட்டை மற்றொன்று குட்டை ரகம். தற்பொழுது கலப்பு ரகம் கூட வந்துவிட்டது. நல்ல மண் கண்டம், நீர் மற்றும் தடபவெப்ப நிலை விளைச்சல் மாறுபடுகிறது
  • நெட்டை ரதம் 80-100 வருடம் வரை பயன் தரக்கூடியது. நடவு செயது 6-7 வருடங்களில் பயன் தரக்கூடியது. இதில் கொப்பரை தரமானதாக உள்ளது. நல்ல தரமான மரத்தில் 100 -150 காய் தரவல்லது
  • குட்டை ரகம் – குறைந்து வயதில்(3-4) பலன தரவல்லது ஆனால் நீன்ட நாள பயன் மற்றும் நெட்டை ரகம் கோப்பரை தரமுள்ளதாக இல்லை என்று சொல்லபடுகிறுது.
  • கலப்பினங்கள் – நெட்டை(தாய்):குட்டை மற்றும் குட்டை(தாய்):நெட்டை சேர்த்து நல்ல மகசூல் எடுத்துவருகிறார்கள்.
  • நல்ல வாளிப்பன காய்க்கும் ( 25-60 வயதுடைய) மரத்தில் இருந்து நெற்ற எடுத்து நாமே பருவகால மழைக்கும் முன்பு நாற்றுவிடலாம்.

மணல் மண் எருவு கலந்து அதில் புதைத்து வைத்து ஒரு நாள் இடைவெளியில் நீர் பாசனம் செய்யலாம். 8-10 வாரங்களில் முளைப்பு வரும் அவ்வாறு வராத நெற்றுகளை கோப்பரை தயாரிக்க பயன்படுத்தலாம்.

நெட்டை 5 மாதத்திர்குள்ளும், குட்டை 3 மாதத்திர்குள்ளும் முளைக்க ஆரம்பிக்கும். நெட்டை 9-12, குட்டை 7 மாதத்திர்குள் நடவு செய்தல் நன்று. தண்டு வாளிப்பாகவும் (10-12 செமி பருமன்) 4-6 இலைகள் உள்ளதாக இருக்க வேண்டும். நாற்று வெளியே எடுத்து நடும் பொழுது நெட்டை (10 நாடகளுக்குள்), குட்டை (2 நாட்களுக்குள்) நடவு செய்ய வேண்டும். நாற்று எடுக்கும் பொழுகு மணவெட்டி கடப்பாறை கொணடு மண்னை இளக்கு எடுக்க வேண்டும். மட்டை மற்றும் குறுத்தொலை கொண்டு இழுக்க கூடாது நாற்று பாதிக்கும்.

  • நடவு செய்து ஒரு வருடம் வரை 1 நாள் விட்டு பாசனம் செய்ய வேண்டும். இராண்டாம் ஆண்டு வாரம் இருமுறை அதன் பின்பு 10 இடைவெளியில் பாசனம் செய்தல் நன்று. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஈரப்பதத்தை காக்கவும்.
  • மற்ற மரங்களை போல் வருடம் ஒரு முறை அல்லாமல் வருடம் முழுவதும் பலன் தரக்குடியது. நாம் தினமும் இலை, பாளை, தென்னங்குலை, மரம் மற்றும் வேர் வளர்ச்சிக்கு தகுந்த ஊட்ட சத்துக்களை ( எரு, 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் (அ) அமுதக்கரைசல், வருடம் 3 முறை புணணாக்கு கலவை, சாப்பட்டு உப்பு 2 கிலோ) கொடுக்க வேண்டும்.

மதிப்பு கூட்டுதல்

  • தரமான 100 காயில் இருந்து தோரயமாக 15 கிலோ கொப்பரை கிடைக்கும் அவற்றை எண்ணை (8-10 கிலோ) மற்றும் 5 கிலோ புன்னாக்கு கிடைக்கும். அவற்றை நேரடியாக விற்றால் கனிசமான இலாபம் கிடைக்கும்.
  • இளநீர் நல்ல வெப்பத்தை மற்றும் பல வகையான மருத்துவ குணமுடையது.
  • தோங்காய் பாலில் இருந்த காயச்சி எடுக்கும் எண்ணை அருமருந்து (மேல் தோல் இல்லாது இருப்புதால் காரல் இருக்காது). பசு நெய்யை விட வீர்யமானது.
  • பதநீர், கள் தற்பொழுது தடை செய்யபட்டுள்ளது. இவை எதிர் காலத்தல் தடை நீக்கபட்டால் சக்கரை, கற்கண்டு போனற வகைகளில் வருமானம் தரவல்லது.
  • தேங்காய் நீர் மற்றும் நார் கழிவுகள் இயற்கை உரம், கயிறு போன்றவைகள் தயாரிக்க பயன்படுகிறது.

தென்னை ஒரு பனை குடும்பத்தினை சார்ந்த மரம்.  இவற்றை பயிர் செய்வதை விட பனை பயிர் செய்வது மேல் அவ்வளவு வருமானம் செலவு குறைவு. தென்னைக்கு ஆணி வேர் கிடையாது பக்க வேர்கள் மட்டும் தான் 4 அடி ஆழம் 5 அடி ஆரம் வரை 90 சதவீதம் வேர்கள் உள்ளன 6அடி ஆழத்திற்கு நல்ல மண் கண்டம் இருந்த நிலத்தில் பயிர் செய்தால் நன்றாக இருக்கும்.

முடிந்த வரை தோப்பில் கலப்பு மரங்கள் இருந்தால் மகசூல் பாதிக்கும் அயல் மகரந்த சேர்க்கையால். தென்னை கல் மற்றும் மண் கலந்த செம்மண் சரலையில் நல்ல காய்ப்பு திறன் இருக்கும்.

ஒவ்வொரு மரத்தின் கீழும் சோற்று கற்றாழை பயிரிடலாம் அல்லது தென்னையின் நடுவே சோற்று கற்றாழை ஊடு பயிராக செய்வதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து விடுபடுவதோடு இரட்டிப்பு லாபம் எடுக்கலாம்

கார்கூடல்பட்டி அசோக் அவர்களின் அனுபவத்தில் தென்னைக்கு சிறை எடுப்பது தேவையான ஒன்று அல்ல மேலும்  தென்னையில் உழுவது தேவையான ஒன்று இல்லை. தென்னையில் சேர் ஓட்டி நெல் நடவு செய்வதோ அல்லது களைகளை அழிக்க சேர் செய்வதோ கூடாது, மாது அண்ணன் வீட்டு முன்புற மரங்களை செய்தது எம்மால் இன்னும் மறக்க முடியவில்லை.

தென்னைக்கு நுண்ணூட்ட சத்துக்கள் மிக அவசியமான ஒன்று.

அவற்றில் போரான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது இவற்றை எருக்கு மற்றும் வேலியோர ஆடு தின்னா இலை தலைகளை இடுவதன் மூலம் சரி செய்யலாம். இதனால் பென்சில் மரங்கள் அதிக அளவில் உருவாவதை நம்மால் பார்க்க முடிகிறது. எருக்கு இலைகளை குப்பை குழியில் வெட்டி போட்டு அதன் மேல் குப்பைகளை கொட்டினால் விரைவில் மக்கி நுண்ணூட்டம் மிக்க பசுந்தாள் கலந்த தொழு உரமாக கிடைக்கும் மக்கிய பிறகு மரத்தின் அருகில் குழி எடுத்து அதில் உரித்த மட்டைகள் இட்டு அதன் மேல் 25 கிலோ அளவில்  இட்டு மூடி அதன் மேல் பாசனம் செய்ய குறுகிய நாளில் பலன் கொடுக்கும்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அடுத்தடுத்த திசைகளில் செய்ய 8 வருடங்களுக்கு ஒரு சுற்று வரும்.

ஊடுபயிர்

ஊடுபயிராக கொக்கோ
ஊடுபயிராக மஞ்சள்
ஊடுபயிராக தேக்கு
ஊடுபயிராக தீவணபயிர்
ஊடுபயிராக வாழை
ஊடுபயிராக மிளகு

தென்னையை அதிகமாக தாக்க கூடிய நோய்களில் சில

தஞ்சை வாடல் நோய்

இது அதிகமாக நீர் தேங்கும் நிலங்களில் உள்ள மரங்கள் உதாரணமாக ஆற்று படுக்கையில் உள்ள மரங்களை அதிகமாக தாக்கும்.

கருந்தலை புழு

இது பனி காலங்களில் அதிகமாக தாக்கும். உலைகளில் உட்புறமாக தங்கி அதன் பச்சியத்தை முழுவதுமாக தின்று சல்லடை போல் ஆகிவிடும்.

சிவப்பு கூன் வண்டு

மரத்தில் சிறு காயங்கள் ஏற்பட அதை சாதகமாக்கி இந்த வண்டின் தாகுத்தக் இருக்கும். உள்ளே புகுந்து விட்டால் உள்பகுதி முழுவதும் தின்று மரம் சாயும்பொழுது தான் நமக்கு தெரியவரும்

காண்டா மிருக வண்டு

இது 10 வருடங்களுக்கு உட்பட்ட மரங்களை அதன் குருத்து பகுதியை தாக்கி அளிக்கவள்ளது.

ஈரியபயட்ஸ் சிலந்தி

இது வெயில் காலங்களில் அதிகமாக தாக்க கூடியது. குரும்பை இளநீர் பருவம் அடையும் தருவாயில் காயின் மேல் புறத்தை தாக்கவள்ளது.

இதன் தாக்குதலால் காய்கள் உரி மட்டை மேல்புறம் நீர் வடிந்தும் காய்கள் சிறுத்தும் காணப்படும்.

 கேள்வி பதில்

கேள்வி நான் எங்கள் தென்னை மரங்களுக்கு இலை தலை  மற்றும் மண்புளு உரம் கொடுக்றோம். இத்துடன் கல் உப்பும் இட வேண்டும் என சொல்கின்றனர். எதற்காக கல் உப்பு இடவேண்டும் ? மற்றும்  எவ்வளவு, எப்போது, மாதத்திற்கு எத்தனை முறை யிட வேண்டும்? உங்கள் பதில் எங்களுக்கு உதவியாக இருக்கும், நன்றிங்க.

பதில் வீட்டில் தென்னைக்கு வீட்டு கழிவுகள் உப்பு போதுமானது,மேலும் கடற் கரை நகரங்களுக்கும் உப்பு கற்று போதுமானது ஒரு சில இடங்களில் பொட்டாஷ் உரம் இடுவதலும் உப்பு தேவை இல்லை இவ்வாறு  இடத நிலங்களில் சாப்பாட்டு உப்பு இட்டு குளோரிடே சத்து கிடைக்க செய்யலாம் இந்த உப்பில் 55% சதவீதம் உள்ளது ஒரு மரத்திற்கு 2.4 kg  வரை வருடத்திற்கு குடக்கலாம் வருடம் இரண்டு முறை சம்பலுடன் அல்லது எருவுடன் கொடுக்கலாம். பிலிப்பின்ஸ் நாட்டில் இவ்வாறு செய்து 10 சதம் அதிக மகசூல் எடுத்துள்ளனர் என்று சென்னை கார்த்தி கூறினார்.

கேள்வி இன்னும் எனக்கு ஒரு கேள்விங்க தென்னைக்கு இயற்கை வழியில் இலை தலை, மண்புளு உரமுனு கொடுக்றோம். கார்த்திக் அண்ணா கல் உப்பு தரலாம் என சொல்லியிருக்காக. மகசூல் பெருக இயற்கை வழியில் தென்னைக்கு வேறு என்ன கொடுக்கலாங்க?

பதில் கல் உப்பு கொடுக்கலாம்.

மேலும் ஒரு தேங்காயில் உள்ள பருப்பின் தடிமன் மற்றும் அதில் உள்ள எண்ணெய் இருப்பு விகிதம் சிறப்பாக இருக்க அதற்க்கு சல்பர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சல்பர்  அதிகமாக உள்ள இடுபொருட்கள் கொடுப்பதன் மூலம் பருப்பின் அடர்த்தியும் அதனுள் எண்ணெய் அதிகமாக இருக்க உதவுகிறது.

சல்பர் எவ்வாறு தென்னைக்கு கொடுப்பது என்று மலைராஜின் கேள்வியாக இருந்தது

ராக்ஸல்பேட்ல் சல்பர் அதிகமாக உள்ளது மேலும் பசுந்தாள் உரம் அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் சல்பர்  தேவைகளை பூர்த்தி செய்யலாம்

மேலும் பசுந்தாள் உரம் அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் சல்பர் தேவைகளை பூர்த்தி செய்யலாம். சல்பர் தேவைக்கு பசுந்தால் உரம் ( எருக்கன் இலை + தொழு உரம் ) இட்டு பயன் பெறலாம் என்று அசோக் கூறினார்.


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை