இயற்கை முறையில் நிலத்தை வளபடுத்தும் முறைகள்

வளபடுத்தும் முறைகள்

  1. பல தானிய விதைப்பு: ஒரு ஏக்கருக்கு 5 கிலோ மஞ்சள் சோளம், 1 கிலோ கம்பு, 1 கிலோ சிகப்பு சோளம்,  200 கிராம் நரி பயிறு , 200 கிராம் கொள்ளு, 200 கிராம் மொச்சை, 100 கிராம் கடுகு, 100 கிராம் வெந்தயம், 100 கிராம் சீரகம் , 100 கிராம் ஆமணக்கு விதை, 200 கிராம் எள், 200 கிராம் உளுந்து, 200 கிராம் தட்டைபயிறு 200 கிராம் பாசி பயிரு, 1 kg தக்கை பூண்டு, 1 kg சணப்பை கலந்து தெளிக்க  வேண்டும். (மேற்கண்ட பொருட்களில் தங்களிடம் உள்ளதை அதிகபடுத்தி கொள்ளலாம் கடையில் வாங்கும் பொருட்களை குறைத்தும் கொள்ளலாம்.இதில் சோளம் மிகவும் அவசியமானது) இந்த முறையால் ஒரு ஏக்கருக்கு 7 – 9 டன் மக்கு கிடைக்கும்
  2. எருவு போடுதல்: தங்களிடம் உள்ள ஆடு, மாடு, கோழி எருக்களை ஒன்றாக ஒரே எருவு குழியில் கொட்டி மக்க செய்து ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் லோடு போதுமானது. முடிந்தால் குப்பை குழியில் வேப்ப தழை, எருக்கு, நொச்சி போன்றவையும் சேர்த்து மக்கச் செய்யலாம் ..இந்த முறையால் ஏக்கருக்கு 5 – 7 டன் மக்கு கிடைக்கும். அல்லது தங்கள் பகுதியில் கிடை கிடைத்தாலும் அடித்து கொள்ளலாம்.
  3. பயிர் அறுவடை முடிந்த பின்னர் அதன் மீதி பாகங்களை வயலில் பரப்பி உழவு செய்தல் (Ex.. வெங்காயம் ஆய்ந்த பிறகு அதன் தோகைகளை வயலில் பரப்பி விடுதல்)
    a. மேற்கண்ட முறையை நாம் கோடை கால மழைகளை பயன்படுத்தி விதைப்பு செய்து மக்க செய்ய வேண்டும். மழை வரட்டும் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தால் அது பயன் தராது. (நெல் தவிர)b. எருவு இவ்வளவு தர இயலாது என்று நினைப்பவர்கள் பயிர் செய்த பின்பு ஒரு ஏக்கருக்கு சுமார் 250 கிலோ அளவு எடுத்து சூடோமோனல், விரிடி , அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா தலா 1 kg எடுத்து கலந்து ஒரு வாரம் நிழலில் நிழலில் வைத்து ஈரபதமான சூழலில் வயலில் தெளிக்கலாம்.

 

* நாட்டு மாடு எருவாக இருந்தல் 1 லிட்டர் பஞ்ச கவ்யா 5 லிட்டர் ஜீவாமிர்தம், 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து வைத்தும் பயன் பெறலாம். (சூடோமோனஸ், விரிடி …… எதுவும் வேண்டாம் )

 

சத்து பராமரிப்பு:

  1. எந்த பயிராக இருந்தாலும் விதை நேர்த்தி அவசியம்
  2. ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஏதாவது ஒரு இடுபொருள் Ex.ஜீவாமிர்தம், பஞ்ச காவ்யா, மீன் அமிலம்
  3. 10 நாட்களுக்கு ஒரு முறை இலை வழி தெளிப்பு
  4. எந்த பயிராக இருந்தாலும் அதன் வாழ்நாளிலில் பாதிக்கு மேல் மீன் அமிலம் தெளிக்க கூடாது (ஏன் என்றால் இது வளர்ச்சியை மிகுதி படுத்தும்). Ex: வெங்காயமாக இருப்பின் 35 நாட்களில் இரண்டு முறை மட்டும் போதுமானது அதாவது 15ம் , 30ம் நாள் மட்டும்.
  5. எந்த பயிராக இருந்தாலும் வேப்ப புண்ணாக்கு அவசியம்(வெங்காயம், நிலகடலைக்கு ஏக்கருக்கு 100 kg ).

 

பெரம்பலூர் மாவட்டம் இருர் கிராமம் மாங்காடு பண்ணையில் இருந்து திருநாவுக்கரசு

 

* * * விவசாயம் செய்ய நாட்டு மாடு அவசியம் * * *

# மேலும் ஒரு முக்கியமான தகவல்: முடிந்த வரை பெரிய டிராக்டரை ஈர வயலில் தவிர்க்கவும்

மழை நீர் சேகரிப்பீர் # நன்றி

எங்களது குழவின் நோக்கம் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த தகவல் சென்று சேரவேண்டும் என்பதே. இந்த பதிவை பயன்படுத்துவோர் எங்கள் குழுவின் அடையாளத்தை நீக்க உரிமையில்லை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை