மாடி தோட்டம் – வளர்ச்சி ஊக்கி/ பூச்சி விரட்டி

பூச்சி விரட்டி  / பூஞ்சைக் கொல்லி

தேவையானவை – பிளாஸ்டிக் பாத்திரம் (10 லிட்டர் கொள்ளவு ), 5 லிட்டர் நீர் , 100 கிராம் தயிர், 100 கிராம் சாதம், 200 கிராம் நாட்டு சக்கரை, 50 கிராம் ஈஸ்ட் அல்லது 2 லிட்டர் பழைய சாதத்தின் நீர்

செய்முறை – இவை அனைத்தும் ஒன்றாக கலந்து 7 நாட்கள் ஈ கள் உட்புகாமல் முடி வைக்கவும்  தினமும் ஒரு முறை கலக்கி வந்தால் நன்று. ஏழு நாட்கள் பிறகு வடிகட்டி செடிகளுக்கு தெளித்து வந்தால் செடிகள் பூச்சிகள் அண்டாமல் இருக்கும். மேலும் இவற்ற்றை 15 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்

வளர்ச்சி ஊக்கி( நன்கு பூக்கள் பூக்க )

தேவையானவை – பிளாஸ்டிக் பாத்திரம் (10 லிட்டர் கொள்ளவு ), 5 லிட்டர் நீர் காய்ந்த சாணம் 10 நம்பர்  (ஒரு வருடம் காய்ந்த )

செய்முறை  – காய்ந்த சாணம் நீரில் நன்கு ஊறவைக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து அவற்றை வடிகட்டி அதனுடன் சமஅளவு நீர் கலந்து செடிக்கு 50-100 மில்லி செடிக்கு ஊற்றி வந்தால் நன்றாக பூக்கள் வந்து இருக்கும். பூக்கும் பருவத்தில் வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும். காய்ந்த சாணம் காயவைத்து எரிபொருளாக பயன்படுத்தி கொள்ளலாம் 

டாக்டர் சுராஜ் பிரகாஷ் அகர்வால்

இயற்கை பூச்சி விரட்டி / சுத்தகரிப்பான்  ( பயோ இன்ஸ்யம்ஸ் )

தேவையானவை: நீர்(3 லிட்டர்) , நாட்டு சக்கரை(300 கிராம்)  தாவர கழிவு(காய்கறி/ பழம் – 900 கிராம் ) அவைகளில் முக்கியமாக சிட்ரிக் ஆசிட் உள்ள பழம்(எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்கோடி, அண்ணாச்சி. வாழை பழம்)  மற்றும் அதன் தோல். துர்நாற்றம்(பூண்டு , வெங்காயம், முட்டை கோஸ் , காளி பிளவர் , முள்ளங்கி) , கரை/கலர் (பீட்ருட்,வாழை காய்/இலை/தண்டு, மாதுளை, கத்தரி) போன்ற தாவர கழிவுகள் தவிர்த்தல் நன்று. வாசம் வேண்டும் என்றால் பழங்கள் அதிகமாக சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும். எண்ணெய் தன்மை உள்ள  மற்றும் அசைவ கழிவுகளை தவிர்க்கவும்  

செய்முறை: வாய் அகன்ற பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை ஊற்றி அதில் நாட்டு சக்கரை நன்கு கரைத்து அதனுள் தாவர கழிவுகள் உள்ளே போட்டு மூடி வைக்கவும். தினம் ஒரு முறை திறந்து மூடவும்(ஒஸ்ன், நைட்ரைட் மற்றும் கார்பன்டை ஆக்ஸிட் வெளியேற்றுவதற்கு). இவ்வாறு 30 நாட்களை செய்தல் வேண்டும்(aerobic). அதன்பிறகு 60 நாள் காற்று புகாதவாறு(unaerobic) பாட்டிலை  மூடி நிழலில்  வைக்கவும். 90 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால்  வெண்மையான திரவம் மேலே படிந்து இருக்கும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  கருப்பு கலர் போல் படிந்து இருந்தால் மேலும் ஒரு மடங்கு நாட்டு சக்கரை சேர்த்து 30 நாட்கள் மூடி வைக்க வேண்டும். மேலும் புழுக்கள் தென்பட்டால் ஒரு மடங்கு நாட்டு சக்கரை(300 கிராம்)  சேர்த்து 15 நாட்கள் மூடி வைத்தால் நன்றாக வந்து விடும். பசுமை மற்றும் துர்நாற்றம் வீசினால் கெட்டுவிட்டது என்று பொருள் அதை பயன்படுத்த வேண்டாம். பிறகு அதனை வடி கட்டி தனியாக எவ்வளவு நாள் வேண்டும் என்றாலும் வைத்து இருந்து பயன்படுத்தி கொள்ளலாம் (தாய் திரவம் தயார் ), அதன் சக்கை பாத்திரம் கழுவுவதற்கு மற்றும் தாவர கழிவு களை விரைவாக மக்க வைக்க பயன்படுத்தி கொள்ளலாம் அதனை கீழ் கண்ட முறைகளில் பயன்படுத்தி கொள்ளலாம்

1) 50 மில்லி திரவத்துடன் 5 லிட்டர் நீர் கலந்து செடிகளுக்கு தெளித்தால் நன்கு பூக்கும்/காய்க்கும்  மற்றும் பூச்சி விரட்டி ஆக செயல்படும். மேலும் கொசுக்கள் / ஈ / கரப்பான் / எலி  அண்டாது. தாய் திரவம் நீரில் கலக்காமல் நேரடியாக தெளித்தால் செய்தால் செடி பட்டுபோகும்.

2) இவற்றை பாத்திரம் மற்றும் தரை துடைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

3) சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்துவதாக இருந்தால் ( ஒரு பங்கு தாய் திரவம் , ஒரு பங்கு பூந்தி காய் , ஒரு பங்கு நீர் ) கலந்து 10-15 நாட்கள் கழித்து வடிகட்டி பயன்படுத்தி கொள்ளலாம். பூந்தி காய் 4-5 முறை திரும்ப பயன்படுத்தி கொள்ளலாம். தேவை பட்டால் சீகைக்காய் கூட அரை பங்கு சேர்த்து கொள்ளலாம்

4) ஒரு பங்கு தாய் திராவதுடன் 10 பங்கு நீர் கலந்து பாத்திரம் மற்றும் தரை துடைப்பதறகும் பயன்படுத்தலாம். கட்டாந்தரை தெளித்தால் கொசுக்கள், எறும்பு அண்டாது

5) மேலும் மாசுபட்ட நீரை கூட சுத்தம் செய்து விடலாம் ( 1 லிட்டர் தாய் திரவம் , 1000 லிட்டர் நீரை சுத்தப்படுத்தி விடும் )

6) தோராயமாக இவற்றை தயாரிப்பதற்கு 90(30 திறந்து மூட :60 திறக்காமல் ) நாட்கள் கால அவகாசம்  ஆகும். இவற்றை விரைவாக செய்வது என்றால் தாய் திரவம்(100 மில்லி ) கலந்து செய்தால்  பாதி நாட்களில்(15:30) திரவம் செய்து விடலாம்

டாக்டர் ரோசுகோன் , தாய்லாந்து

தகவல் சேகரிப்பு – கார்த்தி  சென்னை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை