கொரிய இயற்கை விவசாயம் (Korean Natural Farming)

கொரிய நாட்டில் இயற்கை ஈடு பொருட்களை கீழ்கண்ட வகைகளில் தயாரித்து வெற்றி கண்டு வருகின்றார்

பாரம்பரிய நுண்ணியிரிகள் (IMO -Indigenous Microorganisms )

ஐஎம்ஓ 1 (IMO -1)

ஒரு கிலோ பச்சரிசியை கழுவாமல் அப்படியே சமைக்க வேண்டும். சமைக்கும்போது நீரை வடிக்காமல், அதே சமயம் அரிசி குழையாமல் சமைக்க வேண்டும். குக்கரிலும் சமைக்கலாம். ஒரு சதுரமான மரப்பெட்டியில் அதைக்கொட்டி, ஒரு வெள்ளைத்தாள் கொண்டு மூட வேண்டும். செய்தித் தாள் கூடாது. வெள்ளைத்தாள் மட்டும் வெளியில் தெரியும்படி அந்த மரப்பெட்டியை 3-7 நாட்களுக்கு மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். நல்ல இலை சருகுகள் ஓரளவு உள்ள நிழல் பாங்கான பகுதி அல்லது மக்குகள் அதிகம் உள்ள பகுதி செய்தால் நன்றாக இருக்கும். சாதத்தின் மேல் வெளிர் சாம்பல் நிறத்தில் படிந்து இருத்தல் நன்று. மேலும் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் படிந்து இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம் அவைகள் நன்மை செய்யாத நுண்ணுயிர்கள்

ஐஎம்ஓ 2 (IMO -2)

ஐஎம்ஓ 1 ல் தயாரித்து வைத்த சாதத்தில் வெண்மையான பூசணம் பிடித்திருக்கும். அதே நிலையில் 1 கிலோ நாட்டு வெள்ளத்தைக் கலந்து நன்றாக பிசைந்து ஒரு பாட்டிலில் எடுத்து மூடி வைக்க வேண்டும். 1 வாரம்  கழித்துப் பார்க்கும்போது அதில் ஒருவித திரவம் உருவாகி இருப்பதைக் காணலாம்.

உபயோகிக்கும் முறை: 1 லிட்டர் நீருக்கு 50 ml   ஐஎம்ஓ 2 வை சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி , பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் இதை பயன்படுத்தலாம்

ஐஎம்ஓ 3 (IMO -3)

ஒரு லிட்டர்  ஐஎம்ஓ எடுத்து அதன் உடன் 10 லிட்டர் நீர் கலந்து பிறகு 100 கிலோ அரிசி தவிடு  உடன் கலந்து 3-5 நாள் கழித்து அவற்றை பயன்படுத்தலாம்

ஐஎம்ஓ 4 (IMO -4)

ஐஎம்ஓ 3 உடன்  சம அளவு மண் கலந்து ( நீங்கள் பயன்படுத்தும் நிலத்தில் இருந்து) ஒரு நாள்  வைத்து இருந்து பயன்படுத்தலாம்

ஐஎம்ஓ 5 (IMO -5)

ஐஎம்ஓ 4 உடன்  சம அளவு எறு கலந்து ( கோழி எரு அல்லது ஆடு அல்லது மாடு ) சாக்கு கொண்டு 7 நாட்கள் மூடி வைத்து பிறகு வயல்களுக்கு  பயன்படுத்தலாம்

லாக்டிக் ஆசிட் பாக்டீரியா (Lactic Acid Bacteria – LAB)

சம அளவு அரிசி மற்றும் நீர் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நன்கு கலைந்து நீர் மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அரிசி கழுவிய நீர் ஒரு பாட்டில் ஊற்றி கொசுக்கள் உள்ளே போகாதவாறு 4-7 நாட்கள் மூடி வைக்கவேண்டும். பிறகு அதன் அளவைவிட 10 மடங்கு கறந்த பசும் பால் சேர்த்து கொசுக்கள் உள்ளே போகாதவாறு 7 நாட்கள் மெல்லிய துணி அல்லது வெள்ளை தாள் கொண்டு மூடி வைக்கவேண்டும்/ மாவு , புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் மேலே மிதக்கும் இவற்றை நீக்கினால் மஞ்சள் கலந்த திரவம்(லேப்) அடியில் தெரியும். அந்த திரவம் உடன் 3 மடங்கு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு வாரம் வைத்து இருந்தால் உங்கள் இல்லத்தில் லேப் தயாராகிவிடும்.  பயிர் வளர்ச்சி , பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் இதை பயன்படுத்தலாம்

உபயோகிக்கும் முறை: 1 லிட்டர் நீருக்கு 50 ml   லேப்  சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி , பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் இதை பயன்படுத்தலாம்

இயற்கை நுணணுயிர் கரைசல் முறை( Natural Microbes Cultivation Method)

தேவையானவை – 200 லிட்டர் நீர் (மழை நீர் நன்று) , 400 கிராம் வேகவைத்த உருளை கிழங்கு அல்லது தானியங்கள் மாவு. 200 கிராம் கடல் உப்பு அல்லது 7.2 லிட்டர் கடல் நீர், 200 கிராம் வனத்தில் உள்ள இலை மக்கு ( முங்கில் மரத்தில் கீழ் உள்ள ஈரப்பதமான மக்கு  நன்று)

செய்முறை – ஓரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் உப்பு கலந்து கலக்கி விட வேண்டும். பிறகு கிழங்து ஒரு துணியில் கட்டி நீருக்குள் தொங்கவிட வேண்டும் இதை போல் இலை மக்கு கட்டி தனியாக தொங்க விட வேண்டும். பிறகு நன்கு நீருக்குள் உருளை கிழங்கு மற்றும் இலை மக்கு நன்கு கரைத்து விட வேண்டும் , 2-3 நாட்களுக்குள் நல்ல நுண்ணுயிர் பெருக்கம் அடைந்து இருக்கும். இதை 10 மடங்கு நிர் சேர்தது நீரில் கலந்து விடலாம். மேலும் தெளிக்கவும் செய்யலாம். 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும் இல்லை என்றால் நுண்ணுயிர் இறந்து விடும்

கால் நடை (ஆடு / மாடு / கோழி / மீன் )

மேலும் ஐஎம்ஓ 2  மற்றும் லேப் சரி விகிதத்தில் கலந்து 2-3 டேபிள் ஸ்பூன் ஒரு கால் நடைக்கு அடர் தீவனம் மற்றும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தால் நல்ல ஜீரணம் ஆகி ஆரோக்கியமாக  நோய் எதிர்ப்பு சக்தி உடன் இருக்கும்

எள்  சங்காய/செடி  கஷாயம்

காய்ந்த எள்  சங்காயத்தை/செடி  கொளுத்தி கரியாக்க(1 கிலோ) வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு, அது முழுகும் அளவுக்கு நீர்(5 லிட்டர்) ஊற்றி மூடி வைக்க வேண்டும். தேவை பட்டாள் 2 நாளைக்கு ஒரு முறை திறந்து மூடவும். இந்த கஷாயத்தை ஒரு வாரம் கழித்து பயன்படுத்தலாம். இதை பூக்கும் தருணம் பயன்படுத்தினால் நன்று

உபயோகிக்கும் முறை:

1 லிட்டர் நீருக்கு 50 ml   கஷாயத்தை சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

தாவர இலை நொதி கரைசல் – FPJ  (Fermented Plant Juice )

1 கிலோ அளவுக்கு மாசிபத்திரி அல்லது பொன்னாங்கண்ணி அல்லது மல்பெரி தழையை நன்றாக நறுக்கி  2 கிலோ நாட்டு வெல்லத்துடன் கலந்து நன்கு பிசைந்து (காளான் படுக்கை போல) வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் அதிலிருந்து ஒரு வித திரவம் வெளி வரும்.  அதிகப்படியான சூரிய ஒளி அல்லது மழை இருக்கும் போது நாட்கள் தவிர்க்கவும். அதிகப்படியான சூரிய ஒளி சத்துக்கள் ஆவியாகி இருக்கலாம். அதிக மழை முக்கியமான சத்துக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் விட்டு கழுவ இருக்கலாம். மழை இருக்கும் போது, இரண்டு நாட்களுக்கு பிறகு மட்டுமே சேகரிக்க.சூரிய உதயத்திற்குப் முன் பொருட்கள் சேகரிக்க. தாவரங்கள் இந்த நேரத்தில் சரியான ஈரப்பத அளவு இருக்கும்

உபயோகிக்கும் முறை

1 லிட்டர் நீருக்கு 10 ml FPJ திரவத்தை சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவற்றை வளர்ச்சி பருவத்தில் தெளித்தால் நன்றாக இருக்கும்

பழ நொதிக் கரைசல் – FFJ  (Fermented Fruit Juice )

வாழைப்பழம், திராட்சை, கொய்யா, மாம்பழம், தர்பூசணி, அல்லது பப்பாளிப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ(குளிர் காலம்)/ ஒரு கிலோ 200 கிராம் (கோடை)  வெல்லத்துடன் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து, 1 வாரம் கழித்து  பார்க்கும்போது ஒரு வித திரவம் சுரந்திருக்கும்.

உபயோகிக்கும் முறை

1 லிட்டர் நீருக்கு 10 ml FFJ திரவத்தை சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பயிர் ஆரோக்கியமாக இருக்கும்

மூலிகைச் சாறு OHN (Oriented Herbal Nutrients )

இஞ்சி கஷாயம் :

ஒரு கிலோ இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 1 கிலோ நாட்டு வெல்லத்துடன் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு வாரம் வைத்து இருந்து பிறகு பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை :

1 லிட்டர் நீருக்கு 10 ml இஞ்சி கஷாயம் சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பூண்டு கஷாயம்:

ஒரு கிலோ பூண்டை தோல் நீக்கி நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 1 கிலோ நாட்டு வெல்லத்துடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். ஒரு வரத்திற்குப் பின் பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை :

1 லிட்டர் நீருக்கு 10ml பூண்டு கஷாயம் சேர்த்து செடிகளின் இலைகள் நன்றாக நனையும்படிக்கு மாலை நேரத்தில் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

வாழைத்தண்டு கஷாயம் :

ஒரு கிலோ அளவிற்கு  வாழைத்தண்டை நறுக்கி பின்னர் நன்றாக நசுக்கி அத்துடன் ஒரு கிலோ வெல்லம் சேர்த்து பிசைந்து 1 வாரம் வைத்திருந்து எடுத்தால் வாழைத்தண்டு கஷாயம் தயார்.

உபயோகப்படுத்தும் முறை:

10 ml வாழைத்தண்டு கஷாயத்திற்கு  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்

புகையிலை கஷாயம்:

புகையிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட வேண்டும். ஆறிய நீரில் இந்த புகையிலை துண்டுகளை மூழ்கச் செய்து ஒரு வாரம் ஊற விட்டு பயன்படுத்தலாம்.

உபயோகப்படுத்தும் முறை:

10 ml புகையிலை கஷாயத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்

முட்டை ஓடு கஷாயம்:

வேக வைக்காத முட்டையிலிருந்து எடுக்கப்பட்ட முட்டை ஓடுகளை வெயிலில் காய வைத்து வாணலியில் லேசாக ஓடு சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அவை நனையும்படிக்கு மேலே வினிகர்  ஊற்றி ஒரு வாரம் ஊற விட வேண்டும்.

உபயோகப்படுத்தும் முறை:

10 ml முட்டை ஓடு கஷாயத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

முட்டை அமினோ அமிலம்:

முட்டையை ஓட்டுடன் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அது மூழ்கும் வரை எலுமிச்சைச் சாற்றை ஊற்றி ஒரு வாரம் ஊற வைத்தால் முட்டை அமினோ அமிலம் தயார்.

உபயோகப்படுத்தும் முறை:

10 ml முட்டை அமினோ அமிலத்திற்கு  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்

மீன் அமிலம்:

கருப்பு நிற மீன் ஒரு கிலோ, நட்டு வல்லம் ஒரு கிலோ மற்றும் பால் கறக்கும் பசு மாட்டு கோமியம் ஒரு லிட்டர் எல்லாவற்றையும் நன்கு கலந்து 40 நாட்கள் வைத்திருந்தால் மீன் அமிலம் தயார்.

உபயோகப்படுத்தும் முறை:

10 ml மீன் அமிலத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

எலும்பு கஷாயம்:

மாட்டுக் கறி விற்கும் இடத்தில் மாட்டின் எலும்புகளை வாங்கி வந்து நன்கு கருப்பாக மாறும் வரை அனலில் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பாட்டிலில் போட்டு அவை முழுகும் அளவிற்கு வினிகர் ஊற்றி 1 வாரம் ஊற விட்டு எடுத்துக் பயன்படுத்தலாம்.

உபயோகப்படுத்தும் முறை:

10ml எலும்பு கஷாயத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் இலைகள் நனையும்படிக்கு மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

கிழ்கண்ட வளர்ச்சி ஊக்கி எந்த சமயத்தில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

வளர்ச்சி ஊக்கிவளர்ச்சிப் பருவம்பூக்கும் பருவம் காய்க்கும் பருவம்
லேப்  (lab )***
ஐஎம்ஓ 2 (IMO -2)***
எள் கசாயம்  *
தாவர இலை நொதி கரைசல் – FPJ  (Fermented Plant Juice )*  
பழ நொதிக் கரைசல் – FFJ  (Fermented Fruit Juice ) **
மூலிகைச் சாறு OHN (Oriented Herbal Nutrients )  * *
பூண்டு கசாயம்   
பட்டை கசாயம்   
வாழை தண்டு கசாயம்   
புகையிலை கசாயம்   
முட்டை ஓடு கசாயம்  *
முட்டை அமினோ அமிலம்   
மீன் அமிலம்   
ஐஎம்ஓ 3 (IMO -3)   
எலும்பு கசாயம் **

இயற்கை பூச்சி விரட்டி / சுத்தகரிப்பான்  ( பயோ இன்ஸ்யம்ஸ் )

தேவையானவை: நீர்(3 லிட்டர்) , நாட்டு சக்கரை(300 கிராம்)  தாவர கழிவு(காய்கறி/ பழம் – 900 கிராம் ) அவைகளில் முக்கியமாக சிட்ரிக் ஆசிட் உள்ள பழம்(எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்கோடி, அண்ணாச்சி. வாழை பழம்)  மற்றும் அதன் தோல். துர்நாற்றம்(பூண்டு , வெங்காயம், முட்டை கோஸ் , காளி பிளவர் , முள்ளங்கி) , கரை/கலர் (பீட்ருட்,வாழை காய்/இலை/தண்டு, மாதுளை, கத்தரி) போன்ற தாவர கழிவுகள் தவிர்த்தல் நன்று. வாசம் வேண்டும் என்றால் பழங்கள் அதிகமாக சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும். எண்ணெய் தன்மை உள்ள  மற்றும் அசைவ கழிவுகளை தவிர்க்கவும்  

செய்முறை: வாய் அகன்ற பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை ஊற்றி அதில் நாட்டு சக்கரை நன்கு கரைத்து அதனுள் தாவர கழிவுகள் உள்ளே போட்டு மூடி வைக்கவும். தினம் ஒரு முறை திறந்து மூடவும்(ஒஸ்ன், நைட்ரைட் மற்றும் கார்பன்டை ஆக்ஸிட் வெளியேற்றுவதற்கு). இவ்வாறு 30 நாட்களை செய்தல் வேண்டும்(aerobic). அதன்பிறகு 60 நாள் காற்று புகாதவாறு(unaerobic) பாட்டிலை  மூடி நிழலில்  வைக்கவும். 90 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால்  வெண்மையான திரவம் மேலே படிந்து இருக்கும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  கருப்பு கலர் போல் படிந்து இருந்தால் மேலும் ஒரு மடங்கு நாட்டு சக்கரை சேர்த்து 30 நாட்கள் மூடி வைக்க வேண்டும். மேலும் புழுக்கள் தென்பட்டால் ஒரு மடங்கு நாட்டு சக்கரை(300 கிராம்)  சேர்த்து 15 நாட்கள் மூடி வைத்தால் நன்றாக வந்து விடும். பசுமை மற்றும் துர்நாற்றம் வீசினால் கெட்டுவிட்டது என்று பொருள் அதை பயன்படுத்த வேண்டாம். பிறகு அதனை வடி கட்டி தனியாக எவ்வளவு நாள் வேண்டும் என்றாலும் வைத்து இருந்து பயன்படுத்தி கொள்ளலாம் (தாய் திரவம் தயார் ), அதன் சக்கை பாத்திரம் கழுவுவதற்கு மற்றும் தாவர கழிவு களை விரைவாக மக்க வைக்க பயன்படுத்தி கொள்ளலாம் அதனை கீழ் கண்ட முறைகளில் பயன்படுத்தி கொள்ளலாம்

1) 50 மில்லி திரவத்துடன் 5 லிட்டர் நீர் கலந்து செடிகளுக்கு தெளித்தால் நன்கு பூக்கும்/காய்க்கும்  மற்றும் பூச்சி விரட்டி ஆக செயல்படும். மேலும் கொசுக்கள் / ஈ / கரப்பான் / எலி  அண்டாது. தாய் திரவம் நீரில் கலக்காமல் நேரடியாக தெளித்தால் செய்தால் செடி பட்டுபோகும்.

2) இவற்றை பாத்திரம் மற்றும் தரை துடைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

3) சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்துவதாக இருந்தால் ( ஒரு பங்கு தாய் திரவம் , ஒரு பங்கு பூந்தி காய் , ஒரு பங்கு நீர் ) கலந்து 10-15 நாட்கள் கழித்து வடிகட்டி பயன்படுத்தி கொள்ளலாம். பூந்தி காய் 4-5 முறை திரும்ப பயன்படுத்தி கொள்ளலாம். தேவை பட்டால் சீகைக்காய் கூட அரை பங்கு சேர்த்து கொள்ளலாம்

4) ஒரு பங்கு தாய் திராவதுடன் 10 பங்கு நீர் கலந்து பாத்திரம் மற்றும் தரை துடைப்பதறகும் பயன்படுத்தலாம். கட்டாந்தரை தெளித்தால் கொசுக்கள், எறும்பு அண்டாது

5) மேலும் மாசுபட்ட நீரை கூட சுத்தம் செய்து விடலாம் ( 1 லிட்டர் தாய் திரவம் , 1000 லிட்டர் நீரை சுத்தப்படுத்தி விடும் )

6) தோராயமாக இவற்றை தயாரிப்பதற்கு 90(30 திறந்து மூட :60 திறக்காமல் ) நாட்கள் கால அவகாசம்  ஆகும். இவற்றை விரைவாக செய்வது என்றால் தாய் திரவம்(100 மில்லி ) கலந்து செய்தால்  பாதி நாட்களில்(15:30) திரவம் செய்து விடலாம்

டாக்டர் ரோசுகோன் , தாய்லாந்து

தகவல் சேகரிப்பு – கார்த்தி  சென்னை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை